129 - ஆத்தூர் - திண்டுக்கல்

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்து£ர் தொகுதியில் சின்னாளபட்டி, அகரம், தாடிக்கொம்பு, கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை ஆகிய ஏழு பேரூராட்சிகள் உள்ளன. மேலும் ஆத்து£ர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 48 ஊராட்சிகளும் அடங்கியுள்ளது. தொகுதியில் உள்ள ஆத்து£ர் நீர்த்தேக்கம் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் பல கிராமங்கள் அமைந்துள்ளதால் தென்னை விவசாயம் அதிகளவில் உள்ளது. நெல் மற்றும் இதர பயிர்களும் பயிரிடப்படுகிறது. அதிகம் விவசாயம் சார்ந்தே மக்கள் உள்ளனர். வேலைவாய்ப்புக்கள் வழங்கும் வகையில் பெரிய தொழிற்சாலைகள் இத்தொகுதியில் இல்லை. தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால், இவை சார்ந்து பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைத்து இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் வறண்ட பகுதியாக இருப்பதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதை போக்க கொண்டுவரப்பட்ட காவிரி குடிநீர் திட்டம் முழுமையடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சின்னாளபட்டியில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் சுங்குடி சேலைகள், காட்டன் சேலைகளுக்கு வடமாநிலங்களில் அதிக கிராக்கி உள்ளது. இதனால் நெசவுத்தொழிலை மேம்படுத்த சின்னாளபட்டி பகுதியில் நெசவுப்பூங்கா அமைக்கவேண்டும் என்பது இப்பகுதி நெசவாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. ஆத்து£ர் தொகுதியில் கிராமங்கள் அதிகளவில் இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றத்திற்காக ஒரு அரசு கலைக்கல்லு£ரி அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழந்துள்ளது. 1977 முதல் நடைபெற்ற 9 தேர்தல்களில் அதிமுக ஐந்து முறையும், திமுக நான்கு முறையும் வெற்றிபெற்றுள்ளது. தற்போது எம்எல்ஏ வாக திமுக வைசேர்ந்த இ.பெரியசாமி உள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

நத்தம் இரா.விசுவநாதன்

அதிமுக

2

இ.பெரியசாமி

திமுக

3

எம். பாக்கியம்செல்வராஜ்

தேமுதிக

4

இ. நிர்மலாஞானசவுந்தரி

பாமக

5

எஸ்.டி.இளஞ்செழியன்

பாஜக

6

ஆர்.மரியகுணசேகரன்

நாம் தமிழர்

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,30,794

பெண்

1,37,593

மூன்றாம் பாலினத்தவர்

15

மொத்த வாக்காளர்கள்

2,68,402

2006 சட்டமன்ற தேர்தல்

129. ஆத்தூர்

வ எண்

பெயர்

கட்சி

வாக்குகள்

1

I. பெரியசாமி

தி.மு.க

76308

2

C. சீனிவாசன்

அ.தி.மு.க

49747

3

P. ராஜேஷ் பெருமாள்

தே.மு.தி.க

11485

4

D. முத்துராமலிங்கம்

பி.ஜே.பி

1794

5

S. முருகானந்தம்

சுயேச்சை

1086

6

P. சரவணகுமார்

பி.எஸ்.பி

1012

7

C. புதுமை

சுயேச்சை

603

8

S. போத்திராஜ்

சுயேட்சை

484

9

C. பாலுசாமி

சுயேச்சை

275

10

A. சண்முகம்

சுயேச்சை

227

11

S. சிவகுமார்

சுயேச்சை

207

12

K.S. சவுபார் நவாஹி

சுயேச்சை

204

143432

2011 சட்டமன்ற தேர்தல்

129. ஆத்தூர்

வ எண்

பெயர்

கட்சி

வாக்குகள்

1

I. பெரியசாமி

தி.மு.க

112751

2

S. பாலசுப்பிரமணி

தே.மு.தி.க

58819

3

S. பாலசுப்பிரமணி

சுயேச்சை

6685

4

T. ராஜா

சுயேச்சை

3207

5

J. பரணிதரன்

பி.ஜே.பி

2233

6

K. ராமாமூர்த்தி

சுயேச்சை

1384

7

B. ராஜா

பி.எஸ்.பி

1191

8

M. இளஞ்செழியன்

ஐ.ஜே.கே

799

9

K. பழனிசாமி

சுயேச்சை

591

10

M. முருகானந்தம்

சுயேச்சை

581

11

R. அழகு பாண்டியன்

சுயேச்சை

501

12

C. பிரபாகர்

சுயேச்சை

308

13

J.L. சங்கர்

சுயேச்சை

195

189245

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்