154 - பண்ருட்டி

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று பண்ருட்டி. செம்மண் பூமியான பண்ருட்டி பலா மற்றும் முந்திரி விளைச்சலுக்கு பெயர்போனது.சென்னை-கும்பகோணம் மார்க்கத்தில் உள்ள பண்ருட்டி முழுக்க விவசாயம் சார்ந்த தொகுதி. 2011-ல் நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பின் பண்ருட்டி ஒன்றியத்தைச் காடாம்புலியூர், பேர்பெரியான்குப்பம், பனிக்கன்குப்பம், மருங்கூர் உள்ளிட்ட ஊராட்சிகள் வேறு தொகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது. அதேநேரத்தில் நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்த நகராட்சி, மற்றும் வருவாய் கிராமங்கள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டதால், இத்தொகுதியில் பண்ருட்டி ஒன்றியம், அண்ணாகிராமம் ஒன்றியம் என இரு ஒன்றியங்களும், பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் என நகராட்சிகளும் மேல்பட்டாம்பாக்கம் மற்றும் தொரப்பாடி பேரூராட்சியும் உள்ளது.

மிகவும் பழமைவாய்ந்த திருவதிகை வீரட்டானஸ்வரர் கோயில் பண்ருட்டி நகருக்கு ஆன்மிக பெருமை சேர்த்துவருகிறது.மிகவும் பின்தங்கியப் பகுதியாக கருதப்படும் பண்ருட்டியில் அரசு தொழில் பயிற்சி நிறுவனம் மட்டுமே செயல்படுகிறது.அதேநேரத்தில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதிக ரயில் போக்குவரத்து தடங்கள் நிறந்ததாக விருத்தாசலம் ஜங்ஷன் விளங்குகிறது.கிராமப் புறங்களையே உள்ளடக்கிய இத்தொகுதியில் இந்துக்கள் அடுத்தபடியாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் சம அளவில் வசிக்கின்றனர். முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாக விளங்குவதால் ஏராளமான விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், வியபாரிகள்,மரச் சிற்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் வசிக்கின்றனர்.

இந்தத் தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகளுக்குக் குறைவில்லை. இந்தத் தொகுதியில் 90 சதவிகிதம் பேர் முந்திரி விவசாயத் தொழிலை சார்ந்துள்ளனர்.கடலோர மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தத் தொகுதி அடிக்கடி இயற்கை சீற்றத்துக்கு ஆளாகிவருவது தொடர்கதையாக உள்ளது. 2011-ல் ஏற்பட்ட தானே புயல், 2015-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக முந்திரி விவசாயிகள் பெரும் சோகத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தொகுதியின் வழியாகச் செல்லும் கெடிலம் மற்றும் தென்பெண்ணையாற்றில் நடைபெறும் மணல் கொள்ளைகளால் இப்பகுதியில் நீர்வள ஆதாரம் குறைந்து கொண்டே போவதாக தொகுதி வாசிகள் தெரிவிக்கின்றனர். நீண்டகாலமாக நடைபெறும் பண்ருட்டி மேம்பாலப் பணிகளால் வியாபாரிகள் பெரும்பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர். கிராமச் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் அவை சீர்செய்யப்படாமல் உள்ளது,கிராமங்களுக்கு போக்குவரத்து சேவை படிபடியாக குறைக்கப்பட்டது ஏன் ? என தொகுதி வாசிகள் இந்த பிரச்னைகள் தீர்க்கப் பட வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கைகளாக முன் வைக்கின்றனர்.

பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதியில் 1952 முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த 14 தேர்தல்களில் திமுக, அதிமுக,பாமக தலா 3 முறையும், காங்கிரஸ், தேமுதிக மற்றும் சுயேட்சை உள்ளிட்டவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2006-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் தி.வேல்முருகனும், 2011-ல் நடைபெற்ற தேர்தலில் தேமுதிக சார்பில் பி.சிவக்கொழுந்தும் வெற்றிபெற்றனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

பி.சத்யா

அதிமுக

2

பொன்.குமார்

விவசாய தொழிலாளர்கள் கட்சி- திமுக

3

பி.சிவக்கொழுந்து

தேமுதிக

4

ஏ.தர்மலிங்கம்

பாமக

5

எஸ்.ஆர்.சரவணன்

ஐஜேகே

6

எஸ்.மெகபூபாஷா

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பண்ருட்டி தாலுகா (பகுதி) பைத்தாம்பாடி, காவனூர், உளுந்தமாபட்டு, எனாதிரிமங்கலம், குறத்தி, அக்கடவல்லி, கண்டரக்கோட்டை (வடக்கு), புலவனூர், மேல்குமாரமங்கலம் (தெற்கு), பகண்டை, கொங்கராயனூர். கோழிப்பாக்கம், மாளிகைமேடு, திராசு, பூண்டி, திருத்துறையூர், கயப்பாக்கம், கரும்பூர், அவியனூர், அழகுபெருமாள்குப்பம், உறையூர், விரிஞ்சிப்பாக்கம், பனப்பாக்கம், பூங்குணம். மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, பெருமாள்நாயக்கன்பாளையம், சித்தரசூர், பாலூர், எழுமேடு, லஷ்மிநாராயணபுரம், கணிசப்பாக்கம், கோட்டம்பாக்கம். பண்டரக்கோட்டை, மணப்பாக்கம், அங்குச்செட்டியாளையம், சன்னியாசிபேட்டை, எய்தனூர், அரியிருந்தமங்கலம். கந்தரவாண்டி, கீழ்ருங்குணம், கீழ்க்குப்பம், பல்லவராயநத்தம். பலாப்பட்டு, சிறுநங்கைவாடி, சாத்டிப்பட்டும் சேமக்கோட்டை, கொளப்பாக்கம், மற்றும் வீரப்பெருமாநல்லூர் கிராமங்கள், மேல்பட்டாம்பாக்கம் (பேரூராட்சி) நெல்லிக்குப்பம் (நகராட்சி) பண்ருட்டி (நகராட்சி) மற்றும் தொரப்பாடி (பேரூராட்சி)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,11,406

பெண்

1,14,841

மூன்றாம் பாலினத்தவர்

10

மொத்த வாக்காளர்கள்

2,26,257

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி

1967

பண்ருட்டி இராமச்சந்திரன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1971

பண்ருட்டி இராமச்சந்திரன்

திமுக

1977

பண்ருட்டி இராமச்சந்திரன்

அதிமுக

1980

பண்ருட்டி இராமச்சந்திரன்

அதிமுக

1984

பண்ருட்டி இராமச்சந்திரன்

அதிமுக

1989

நந்தகோபால கிருஷ்ணன்

திமுக

1991

பண்ருட்டி இராமச்சந்திரன்

பாட்டாளி மக்கள் கட்சி

1996

ராமசாமி

திமுக

2001

வேல்முருகன்

பாட்டாளி மக்கள் கட்சி

2006

வேல்முருகன்

பாட்டாளி மக்கள் கட்சி

2011

சிவகொழுந்து

தேமுதிக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

வேல்முருகன்.T

பாமக

54653

2

ராஜேந்திரன்.R

அதிமுக

54505

3

ராமச்சந்திரன்.S

தேமுதிக

30133

4

பாலு.S

சுயேச்சை

1366

5

குமரகுரு.V.J

சுயேச்சை

793

6

செல்வகுமார்.R.M

பாஜக

713

7

ராமமூர்த்தி.G

பகுஜன் சமாஜ் கட்சி

494

8

கமலகண்ணன்.C

சுயேச்சை

491

143148

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

சிவகொழுந்து.P

தேமுதிக

82187

2

சபா ராஜேந்திரன்

திமுக

71471

3

சங்கர்.R

இந்திய ஜனநாயக கட்சி

1570

4

தெய்விகதாஸ்.M

புரட்சி பாரதம்

1155

5

செல்வகுமார்.R.M

பாஜக

1064

6

வேல்முருகன்.N.S

சுயேச்சை

943

7

ஐய்யப்பன்.K

பகுஜன் சமாஜ் கட்சி

859

8

குப்புசுவாமி.K

சுயேச்சை

761

9

கங்காதரன்.D

சுயேச்சை

711

10

குமார்.T

சுயேச்சை

458

11

வெங்கடேசன்.G.K

சுயேச்சை

264

161443

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்