159 - காட்டுமன்னார்கோயில்(தனி)

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித் தொகுதிகளில் காட்டுமன்னார்கோவில் தொகுதியும் ஒன்று. 1962ம் ஆண்டு காட்டுமன்னார்கோவில் தொகுதி உருவானது. பொதுத் தொகுதியாக இருந்த இந்த தொகுதி 1967ம் ஆண்டு தனித் தொகுதியானது. இந்த தொகுதியில் காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளும், குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள்,கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள், லால்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம்,காட்டுமன்னார்கோவில் ஆகிய பேரூராட்சிகள் உள்ளக்கியதாகும்.

இங்கு ஆதிதிராவிடர்கள் 40 சதவீதம் பேரும், வன்னியர்கள் 35 சதவீதம் பேரும், முஸ்ஸிம்கள் மற்றும் பிற சமூதாயத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதம் பேர் உள்ளனர்.

இங்கு பிரதான தொழில் விவசாயம் ஆகும். இந்த தொகுதியில் தொழில் வளர்ச்சிக்கான தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் வீராணம் ஏரி இந்த தொகுதியில் உள்ளது. இது விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கிவருகிறது.வீரநாராயண பெருமாள் கோவில், அனந்தீஸ்வரர் கோயில் ,மேலகடம்பூர் அமர்தகடேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளது.

வீராணம் ஏரி தூர் வாரப்படவில்லை என்றும் வடகிழக்கு பருவமழையின் பொது காட்டுமன்னார்கோயில் தொகுதி தொடந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் அரசு நிரந்தர குற்றச்சாட்டு உள்ளது. கிராம சாலைகள் சீர் செய்யப்படவில்லை. நலித்து போன வெற்றிலை விவசாயத்தை காப்பாற்றிட சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆதங்கத்தில் உள்ளனர்.

இந்த தொகுதியின் மொத்த வாக்களர்கள் 2 லட்சத்து 10 ஆயிரத்து 688, ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 252, பெண்வாக்காளர்கள் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 431, மூன்றாம் பாலினம் 5 ஆகும்.

1962ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி(திமுக) 27 ஆயிரத்து 706 வாக்குகள் பெற்றார். ஜி.வாகீசம்பிள்ளை(காங்கிரஸ்) 27 ஆயிரத்து 599 வாக்குகள் பெற்றார்.

1962ம் ஆண்டு நடந்த தேர்தலில் எஸ். சிவசுப்ரமணியம்(காங்கிரஸ்) 30 ஆயிரத்து 521 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சி.கோவிந்தராஜ்(திமுக) 30 ஆயிரத்து387 வாக்குகள் பெற்றார்.

1971ம் ஆண்டு எஸ்.பெருமாள்(திமுக) 32 ஆயிரத்து 847 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.எம். குப்புசாமி( பழைய காங்கிரஸ்) 29 ஆயிரத்து 551 வாக்குகள் பெற்றார்.

1977ம் ஆண்டு நடந்த தேர்தலில் இ. ராமலிங்கம்(திமுக) 26 ஆயிரத்து038 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர். ராஜன்(அதிமுக) 19 ஆயிரத்து991 வாக்குகள் பெற்றார்.

1980ம் ஆண்டு இ.ராமலிங்கம்(திமுக) 44 ஆயிரத்து012 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.எஸ். மகாலிங்கம்( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) 29 ஆயிரத்து350 வாக்குகள் பெற்றார்.

1984ம் ஆண்டு எஸ். ஜெயச்சந்திரன்(காங்கிரஸ்)42 ஆயிரத்து 928 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கே.பி. தங்கசாமி(திமுக) 41 ஆயிரத்து 796 வாக்குகள் பெற்றார்.

1989ம் ஆண்டு ஏ. தங்கராசு( சுயேட்சை) 30 ஆயிரத்து 877 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இ.ராமலிங்கம்(திமுக) 27ஆயிரத்து036 வாக்குகள் பெற்றார்.

1991ம் ஆண்டு என்.ஆர்.ராஜேந்திரன்(மனித உரிமை கட்சி) 48 ஆயிரத்து103 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் இவர் அதிமுகவுக்கு மாறினார். ஜி.வெற்றிவீரன்(பாமக) 21ஆயிரத்து785 வாக்குகள் பெற்றார்.

1996ம் ஆண்டு இ.ராமலிங்கம்(திமுக) 46 ஆயிரத்து 978 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எல். இளையபெருமாள் (மனித உரிமை கட்சி) 37ஆயிரத்து159 வாக்குகள் பெற்றார்.

2001ம் ஆண்டு பி. வள்ளல்பெருமான்( ஜனநாயகப்பேரவை- திமுக கூட்டணி) 55 ஆயிரத்து 444 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆர்.சச்சிதானந்தம்(காங்கிரஸ்) 38 ஆயிரத்து927 வாக்குகள் பெற்றார்.

2006ம் ஆண்டு டி.ரவிக்குமார் (விடுதலைச்சிறுத்தைகள் கட்சி) 57ஆயிரத்து 244 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பி.வள்ளால்பெருமான்(காங்கிரஸ்) 43 ஆயிரத்து830 வாக்குகள் பெற்றார்.

2011ம் ஆண்டு முருகுமாறன்( அதிமுக) 83 ஆயிரத்து 665 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.ரவிக்குமார்(விடுதலைச்சிறுத்தைகள்) 51 ஆயிரத்து940 வாக்குகள் பெற்றார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

என் .முருகுமாறன்

அதிமுக

2

கே.ஐ. மணிரத்தினம்

காங்கிரஸ்

3

தொல்.திருமாவளவன்

விசிக

4

அன்பு.சோழன்

பாமக

5

எஸ்.பி. சரவணன்

பாஜக

6.

இ.ஜெயஸ்ரீ

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

காட்டுமன்னார்கோயில் வட்டம்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,07,151

பெண்

1,04,827

மூன்றாம் பாலினத்தவர்

5

மொத்த வாக்காளர்கள்

2,11,983

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1962

எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

திராவிட முன்னேற்றக் கழகம்

1967

எஸ்.சிவசுப்பிரமணியன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1971

எஸ்.பெருமாள்

திராவிட முன்னேற்றக் கழகம்

1977

வடலூர் இராமலிங்கம்

திராவிட முன்னேற்றக் கழகம்

1980

வடலூர் இராமலிங்கம்

திராவிட முன்னேற்றக் கழகம்

1984

எஸ்.ஜெயசந்திரன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1989

ஏ.தங்கராசு

இந்திய மனிதஉரிமை கட்சி

1991

ராஜேந்திரன்

இந்திய மனிதஉரிமை கட்சி

1996

வடலூர் இராமலிங்கம்

திராவிட முன்னேற்றக் கழகம்

2001

பி.வள்ளல்பெருமான்

காங்கிரஸ் ஜனநாயக பேரவை

2006

து. இரவிக்குமார்

விடுதலைச் சிறுத்தைகள்

2011

முருகுமாறன்

அதிமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ரவிக்குமார்.D

விடுதலை சிறுத்தைகள் கட்சி

57244

2

வள்ளல்பெருமான்.P

காங்கிரஸ்

43830

3

உமாநாத்.R

தேமுதிக

6556

4

செல்லகண்ணு.S

ஏ.ஐ.வி.பி

902

5

வெற்றிகுமார்.P

சுயேச்சை

843

6

வசந்தகுமார்.A

பகுஜன் சமாஜ் கட்சி

818

7

முருகானந்தம்.M

சுயேச்சை

542

8

பாலகுரு.A

சுயேச்சை

510

111245

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

முருகுமாறன்.N

அதிமுக

83665

2

ரவிகுமார்.D

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

51940

3

நந்தகுமார்.L.E

சுயேச்சை

2330

4

பாக்கியராஜ்.P.K

புரட்சி பாரதம்

1969

5

முருகானந்தம்.M

சுயேச்சை

1665

6

பாரதிதாசன்.K

பகுஜன் சமாஜ் கட்சி

1246

7

அழகிரி.P

சுயேச்சை

1012

8

மோகனாம்பாள்.B

இந்திய ஜனநாயக கட்சி

946

144773

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்