கோவை மாவட்டத்தில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சட்டப்பேரவை தொகுதி பொள்ளாச்சி. மாவட்டத்தில் முக்கிய தொகுதிகளில் ஒன்றாக பார்க்கபடுகிறது. கடந்த 2011-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை பிரிக்கப்பட்டு சிறிய தொகுதியாக சுருங்கிவிட்டது.
தென்னை நார் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. தமிழகத்தில் அதிகளவு இளநீர் உற்பத்தி நடைபெறும் இடம் பொள்ளாச்சி ஆகும். தொகுதி எல்லைகள்: பொள்ளாச்சி வட்டத்தில் அரசம்பாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள், பெரிய நெகமம் (பேரூராட்சி), ஆச்சிப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பொள்ளாச்சி (நகராட்சி). உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
மிகவும் பழமைவாய்ந்த மாட்டுச் சந்தை , காந்தி காய்கறி சந்தை இங்குள்ளது. ஏராளமான தனியார் தொழில்நுட்ப கல்லூரிகள், வேளாண்மை கல்லூரி அமைந்துள்ளது. விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. கவுண்டர் இனத்தை சேர்ந்தவர்கள் இங்கு வாக்கு வங்கியாக கருதப்படுகிறது. அதனால் பெரும்பாலும் அந்த இனத்தை சேர்ந்தவர்களே அனைத்து கட்சியாலும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்.
தொகுதியில் நீண்ட கால பிரச்சினைகள் பொளள்ளாச்சி நகர் பகுதியில் தினமும் காலையும் மாலையும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல்தான் முதன்மையான பிரச்சினையாக உள்ளது. பொ ள்ளாச்சி நகராட்சி பகுதியில் முழுமையாக முடிக்கப்படாத சாலை மேம்பாட்டு பணிகள் . பொ ள்ளாச்சி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள ரிங் ரோடு, பொள்ளாச்சி -கோவை நான்கு வழிச்சாலை திட்டம் ஆகியவை கிடப்பில் உள்ளன. காந்தி சிலை சந்திப்பில் மேம்பாலம், அரசு கல்லூரி ஆகிய கோரிக்கைகளையும் முன்வைக்கிறார்கள்.
கடந்த 1977 முதல் 2011 வரை நடைபெற்ற 9 சட்டப்பேரவை தேர்தல்களில், ஒரு முறை திமுகவும் 8 முறை அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கடைசியாக 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமியும் வெற்றிபெற்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண்
வேட்பாளர்
கட்சி
1
வி.ஜெயராமன்
அதிமுக
2
ஆர்.தமிழ்மணி
திமுக
3
எஸ்.முத்துகுமார்
தேமுதிக
4
வி.சு.கண்ணப்பன்
பாமக
5
ஆர்.சிவக்குமார்
பாஜக
6.
கி.உமா மகேஸ்வரி
நாம் தமிழர்
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பொள்ளாச்சி வட்டம் (பகுதி)
அரசம்பாளையம், பணப்பட்டி, மேட்டுபாவி, வடசித்தூர், கொண்டாம்பட்டி, கோதவாடி, குருநல்லிபாளையம், பெரியகளத்தை, காட்டம்பட்டி, ஆண்டிபாளையம், செட்டியக்கபாளையம், நல்லட்டிபாளையம், தேவராயபுரம், கோவிந்தபுரம், சூலக்கல், புரவிபாளையம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம், மேட்டுப்பாளையம், முல்லிப்பட்டி,கணியாலம்பாளையம் தேவணாம்பாளையம், கம்பளாங்கரை, சிறுகளத்தை, சந்திராபுரம், சென்ன நெகமம், வகுதம்பாளையம், கக்கடவு, சோழனூர், சந்தைகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், பூசநாய்க்கெத்தளி, தேவம்பாடி, ராமபட்டினம், தாளக்கரை, சிக்கராயபுரம், கபிளிபாளையம், ஒக்கிலிபாளையம், குடும்பபாளையம், குளக்கல்பாளையம், வரதனூர், வெள்ளாளப்பாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மானூர், திம்மாங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் மற்றும் சேர்வைகாரன்பாளையம் கிராமங்கள்,
பெரிய நெகமம் (பேரூராட்சி), ஆச்சிப்பட்டி (சென்சஸ் டவுன்) மற்றும் பொள்ளாச்சி (நகராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண்
1,05,643
பெண்
1,11,317
மூன்றாம் பாலினத்தவர்
12
மொத்த வாக்காளர்கள்
2,16,972
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
1952
நா. மகாலிங்கம்
காங்கிரஸ்
35148
1957
நா. மகாலிங்கம்
காங்கிரஸ்
520763
1962
நா. மகாலிங்கம்
காங்கிரஸ்
38929
1967
எ. பி. எஸ். கவுண்டர்
திமுக
37480
1971
எ. பி. சண்முகசுந்தர கவுண்டர்
திமுக
41654
1977
ஓ . பி. சண்முகசுந்தரம்
அதிமுக
34896
1980
எம். வி. இரத்தினம்
அதிமுக
52833
1984
எம். வி. இரத்தினம்
அதிமுக
54337
1989
வி. பி. சந்திரசேகர்
அதிமுக (ஜெ)
41749
1991
வி. பி. சந்திரசேகர்
அதிமுக
72736
1996
எசு. இராசு
திமுக
58709
2001
பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுக
64648
2006
பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுக
62455
ஆண்டு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
1952
பி. கே. திருமூர்த்தி
காங்கிரஸ்
27151
1957
கே. பொன்னையா
காங்கிரஸ்
49309
1962
இரங்கசாமி
திமுக
28780
1967
ஈ. கவுண்டர்
காங்கிரஸ்
25688
1971
எ. ஈசுவரசாமி கவுண்டர்
சுயேச்சை
23396
1977
எஸ். இராசு
திமுக
17952
1980
மு. கண்ணப்பன்
திமுக
39797
1984
எஸ். இராசு
திமுக
47527
1989
பி. டி. பாலு
திமுக
37975
1991
அண்டு என்கிற நாச்சிமுத்து
திமுக
40195
1996
பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுக
36895
2001
தமிழ் மணி
திமுக
32244
2006
டி. சாந்தி தேவி
திமுக
59509
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
பொள்ளாச்சி ஜெயராமன்.V
அதிமுக
62455
2
சாந்திதேவி.D
திமுக
59509
3
மீனாக்ஷி சுந்தரம்..S
தேமுதிக
7543
4
ரகுநாதன்.V.K
பாஜக
2039
5
ஜெயராமன்.V.M
சுயேச்சை
1291
6
கோகுல்ராஜ்.G.S
சுயேச்சை
1003
7
மணிகண்டன்..B
சுயேச்சை
838
8
ஜோஸ் தாமஸ்.T
பகுஜன் சமாஜ் கட்சி
415
9
சாந்தி.G
சுயேச்சை
230
10
நடராஜ்.K
சுயேச்சை
225
11
ஆறுமுகம்.P.K
சுயேச்சை
174
135722
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண்
வேட்பாளர்கள்
கட்சி
பதிவான வாக்குகள்
1
முத்துகருபன்ணசாமி.M.K
அதிமுக
81446
2
நித்யநாதன்.K
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்
51138
3
ரகுநாதன்.V.K
பாஜக
3909
4
காளிமுத்து.M
பகுஜன் சமாஜ் கட்சி
1528
5
பிரவீன்குமார்.N
சுயேச்சை
1449
6
ஆறுமுகம்.P.K
சுயேச்சை
1221
7
மணிமாறன்.K
இந்திய ஜனநாயக கட்சி
1056
141747
முக்கிய செய்திகள்
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
7 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago
தேர்தல் 2016
8 years ago