கோயம்புத்தூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

By செய்திப்பிரிவு

1. ஆனை மலை, நல்லாறு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும்.

2. வால்பாறைப் பகுதி மழைநீர் கேரளாவிற்குச் சென்று வருவதைத் தடுத்து, தமிழகத்திற்கு அதிகமாகப் பயன்படும் வகையில் இடைமலை நீர்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் அதிகமாக நீர்ப் பாசன வசதி பெறும்.

3. திருப்பூர், ஈரோடு விவசாயிகளுக்கு அதிகப் பயன்தரும் மேல் அமராவதி நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்றி மேலும் 50 ஆயிரம் ஏக்கர் நீர்ப்பாசன வசதி பெற ஆவன செய்யப்படும்.

4. பொள்ளாச்சியில் தென்னை நல வாரியம் அமைக்கப்படும்.

5. ஊட்டிக்கு காரமடை, பில்லூர், மஞ்சூர் வழியாக மாற்றுப் பாதை அமைக்கப்படும்.

6. கோவை மதுக்கரையில் இருந்து துடியலூர் வரை 120 அடி அகலப் புறவழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்.

7. கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகருக்குப் புறவழிச்சாலையும் பொள்ளாச்சி – கோவை, பொள்ளாச்சி - பழனி ஆகியவற்றிற்கு நான்கு வழிச் சாலைகளும் அமைக்கப்படும்.

8. கோவையில் சிறு – குறு பம்ப்செட் உற்பத்தியாளர்கள் புதிதாக ஐளுஐ முத்திரை வாங்குவதற்காகவும், வருடாந்திரப் புதுப்பித்தலுக்காகவும் "பம்ப்செட் பரிசோதனைக் கூடம்" ஒன்று அமைக்கப்படும்.

9. பொள்ளாச்சியில் தொழிற்பயிற்சி மையம் (ஐ.டி.ஐ) தொடங்கப்படும்.

10. பொள்ளாச்சியில் மகளிர் செவிலியர் பயிற்சிக் கல்லூரி தொடங்கப்படும்.

11. பொள்ளாச்சியில் வாகன நிறுத்தம் உட்பட 2500 சதுர மீட்டர் உள்ள கட்டிடங்களுக்குக் கட்டிட அனுமதி கோவையிலுள்ள திட்டக்குழு

அலுவலகத்திலேயே பெறுவதற்கு வகை செய்யப்படும்.

12. பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த தென்னைப் பொருள்கள் உற்பத்தி வளாகம் அமைக்கப்படும்.

13. பவானி – நொய்யலாறு – அமராவதியாறு – உப்பாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

14. கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்.

15. காந்திபுரம் - உக்கடம் ஆகிய இடங்களிலும் மேலும் உள்ள முக்கிய சந்திப்புகளிலும் மேம்பாலங்கள் கட்டப்படும்.

16. கோவையில் சித்ரா முதல் உப்பிலிபாளையம், ஒண்டிபுதூர் முதல் சுங்கம் வரையிலும் துரித சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

17. நீலாம்பூர் மேட்டுப்பாளையம் புறவழிச்சாலை அமைக்கப்படும்.

18. வால்பாறை சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும்.

19. சூலூர் குளத்திலிருந்து மழைக்காலங்களில் வெளியேறும் உபரி நீரைப் புள்ளிப்பாளையம் நீர்வழிப்பாதையில் திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்படும்.

20. காண்டூர் கால்வாய்த் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவேறத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டு காண்டூர் கால்வாய்ப் பணிகள் நிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

21. வளர்ந்து வரும் கோவை நகரில் கூடுதலாகத் தகவல் தொழில்நுட்பப் பூங்காகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

22. பில்லூர் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும்.

23. வெள்ளளூர் குப்பைக் கிடங்கு பிரச்சினை உரிய முறையில் தீர்க்கப்படும்.

24. கழக ஆட்சியில் சென்ற முறை செய்ததுபோல் கட்டிட வரன்முறைத் திட்டம் கொண்டுவரப்படும்.

25. கோவைக் குற்றாலம் சுற்றுலாத் தலமாக வசதிகள் மேம்படுத்தப்படும்.

26. நொய்யலாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, ஆற்று நீரைக் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படத் தகுந்த திட்டங்கள் உருவாக்கப்பட்டு கோவையைச் சுற்றியுள்ள 11 நீர் நிலைகள் நிரப்பப்படும். (சித்திரவாடி, கிருஷ்ணாம்பதி, நரசாம்பதி, போரூர் குளம்,

செல்வ சிந்தாமணி குளம், உக்கடம், பெரிய குளம், குறிச்சி குளம், செங்குளம், சிங்காநல்லூர் குளம், சூலூர் குளம்).

27. மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்.

28. தொண்டாமுத்தூர் பகுதி திராட்சை விவசாயிகள் பயன்பெறும் வகையில் திராட்சை குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்.

29. கோவையில் மேற்குப் புறவழிச் சாலை அமைக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்