23 - சைதாப்பேட்டை

By செய்திப்பிரிவு

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியாகும். இதன் தொகுதி எண் 23. இது தென் சென்னை பாராளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ளது. தியாகராய நகர், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், ஆலந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இந்த தொகுதியின் எல்லைகளாக அமைந்துள்ளன.

1952-ல் சைதாப்பேட்டை தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் இதுவரை 14 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. தி.மு.க. 8 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1967, 1971-ல் இங்கு திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வென்றுள்ளார். 2001 பேரவைத் தேர்தலில் வென்ற தி.மு.க. வேட்பாளர் பெருமாள் சில மாதங்களிலேயே இறந்ததால் அதே ஆண்டு இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ராதாரவி வெற்றி பெற்றார். அதன் பின்னர், 2006, 2011-ல் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஜி.செந்தமிழன் 2வது முறையாக உள்ளார். கடந்த 2011-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.மகேஷ்குமாரை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த ஜி.செந்தமிழன் வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

சென்னை மாநகராட்சியின் சைதாப்பேட்டை மேற்கு (132), குமரன்நகர் (133), குமரன்நகர் தெற்கு (134), சைதாப்பேட்டை கிழக்கு (135), கலைஞர் கருணாநிதி நகர் (136), ஜி.டி.நாயுடு நகர் கிழக்கு (138), ஜி.டி.நாயுடு நகர் தெற்கு (139), கிண்டி மேற்கு (140), கிண்டி கிழக்கு (141) ஆகிய வார்டுகள் உள்ளன.

கடந்த 2011 ஜனவரி 10ம் தேதி நிலவரப்படி மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 880 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண்கள் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 518 பேரும், பெண்கள் ஒரு லட்த்து 5 ஆயிரத்து 337 பேர் பெண்களும், மற்றவர்கள் 25 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த தொகுதியில் ஆளுநர் மாளிகை, புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகமும், சென்னை ஐஐடியும் பழம் பெரும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி உள்ளது. கோட்டூபுரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் இருக்கிறது. அடையாறு அருகே மறைமலைஅடிகளார் பழமையான பாலம் இருக்கிறது.

மேற்கு சைதாப்பேட்டையில் அமைத்துள்ள காரணீஸ்வர் கோவில் தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குகிறது. சின்னமலையில் புகழ்பெற்ற சர்ச் உள்ளது. மொத்தம் 27 மசூதிகள் உள்ளன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என 3 மதங்களில் இருந்தும் சமமாக மக்கள் இருக்கின்றனர். வன்னியர், தாழ்த்தப்பட்டோர், முதலியாளர்கள் வகுப்பை சேர்ந்தவர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிகமாக இருக்கின்றனர். நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

சமீபத்தில் பெய்த கனமழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்று சைதாப்பேட்டை. எனவே, அடையாறு பகுதிகளில் இருபுறமும் உயரமான தடுப்பு சுவர்கள் எழுப்ப வேண்டும். மேற்குசைதாப்பேட்டை பகுதி இருந்து அண்ணாசாலையை இணைக்கும் வகையில் சாலைகளை விரிவாக்கம் செய்து அதிகளவில் பஸ்கள் இயக்க வேண்டும், ஈக்காட்டுதாங்கல் சாலைகள் இணையும் பகுதியில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் ஆகியவை முக்கியமான கோரிக்கையாக இருக்கின்றன. இதுதவிர, கிண்டி தொழிற்பேட்டையில் வேலைவாய்ப்பு பெருக்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்திட வேண்டுமென பெரும்பாலான இளைஞர்களின் தெரிவிக்கின்றனர்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,39,558

பெண்

1,42,359

மூன்றாம் பாலினத்தவர்

73

மொத்த வாக்காளர்கள்

2,81,990

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

சைதாப்பேட்டை தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2006 )

சட்டமன்ற தேர்தல் ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2006

G.செந்தமிழன்

அதிமுக

46.24

2001

V.பெருமாள்

திமுக

48.13

1996

சைதை கிட்டு

திமுக

58.1

1991

M.K. பாலன்

அதிமுக

57.37

1989

R.S. ஸ்ரீதர்

திமுக

47.05

1984

சைதை துரைசாமி

அதிமுக

49.35

1980

D. புருஷோத்தமன்

திமுக

47.95

1977

D. புருஷோத்தமன்

திமுக

36.7

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

G.செந்தமிழன்

அதிமுக

75973

2

பாஸ்கரன்

பாமக

70068

3

வேனுகோபால்

தேமுதிக

11675

4

ரங்கநாதன்

பிஜேபி

1692

5

ரவி

சுயேச்சை

780

6

நட்ராஜன்

சுயேச்சை

705

7

கந்தசாமி

சுயேச்சை

564

8

மோகன்

சுயேச்சை

469

9

ராமு

சுயேச்சை

425

10

விஸ்வநாதன்

ஏஐஎஃப்பி

368

11

ஸ்ரீராம்

யுசிபிஐ

266

12

சுரேஷ்பாபு

சுயேச்சை

246

13

முனியப்பன்

சுயேச்சை

222

14

ஜெய்சங்கர்

சுயேச்சை

195

15

தமிழ்செல்வன்

சுயேச்சை

148

16

பிரஹலாதன்

சுயேச்சை

93

17

ஆனந்தகுமார்

சுயேச்சை

92

18

விஜயகுமார்

சுயேச்சை

87

19

திருவேங்கடம்

சுயேச்சை

80

20

ராஜசேகர்

சுயேச்சை

78

21

ஆனந்த்

சுயேச்சை

69

164295

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

செந்தமிழன்

அதிமுக

79856

2

மகேஷ்குமார்

திமுக

67785

3

காளிதாஸ்

பிஜேபி

3018

4

சந்திரசேகர்

எம்எம்கேஏ

878

5

பிரஹலாதன்

பிஎஸ்பி

481

6

ஜகதீஷ்குமார்

சுயேச்சை

381

7

ராஜசேகர்

சுயேச்சை

288

8

சுதாகர்

சுயேச்சை

252

9

ஸ்ரீதர்

சுயேச்சை

207

10

முரளி

சுயேச்சை

173

11

புருஷோத்தமன்

சுயேச்சை

168

12

பாபு ஜே.ஏ.கே

சுயேச்சை

153

13

வேல்முகன்

சுயேச்சை

137

14

சிராஜுதீன்

சுயேச்சை

95

15

ஆனந்த்

சுயேச்சை

81

16

மணிமாறன்

சுயேச்சை

77

17

ஆனந்தகுமார்

சுயேச்சை

76

18

சத்யநாராயணன்

சுயேச்சை

63

19

டெல்லி பாபு

சுயேச்சை

56

154225

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்