149 - அரியலூர்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த பெரம்பலூரில் இருந்து பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றதால், ஒருவழியாய் 2007ல் புதிய மாவட்டமாக உருவான இழுபறி பின்னணி அரியலூருக்கு உண்டு. ஆயினும் தனி மாவட்டமாக உருவான நோக்கத்தை அரியலூர் இன்னமும் அடையவில்லை.

தமிழகத்தில் சிமென்ட் ஆலைகள் அதிக எண்ணிக்கையில் குவிந்திருக்கும் பகுதி இது. அரியலூர் மக்களின் வரமும் சாபமுமாக இந்த ஆலைகளே உள்ளன. டைனோசர் முட்டை உள்ளிட்ட பல்வேறு தொல்லுயிர் படிமங்கள் விரவிக்கிடப்பதால் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா என்ற சிறப்பு பெயர் அரியலூருக்கு உண்டு. ஆனால் வாரணவாசி அருகே திறந்தவெளி தொல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. தமிழகத்தின் முக்கிய பறவைகள் சரணாலமான கரைவெட்டி இங்கு அமைந்துள்ளது. கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயில், வீரமாமுனிவர் எழுப்பிய ஏலாக்குறிச்சி அடைக்கல மாதா தேவாலயம் என ஆன்மீக தலங்களும் அதிகம். வன்னியர், உடையார், தலித், மூப்பனார் என்ற வரிசை கிரமத்தில் பெரும்பான்மை மக்கள் தொகுதியில் உள்ளனர்.

அரியலூர் நகராட்சியின் புதை சாக்கடை பணிகள் 7 வருடங்களாக இழுத்தடிப்பில் உள்ளன. சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள், கழிப்பறைகள் ஆகிய வசதிகள் இன்னமும் முழுமை பெறவில்லை. அரியலூர் அரசு சிமென்ட் ஆலை, அதற்கு பின்னர் வந்த தனியாரை விட நவீனத்திலும் வளர்ச்சியிலும் தேங்கி கிடக்கிறது. சிமென்ட் ஆலைகள் வெளியேற்றும் மாசு, அகழ்ந்து அப்படியே விடப்பட்ட சுரங்கங்கள், சிமென்ட் ஆலைக்காக இயங்கும் லாரிகளால் சாலை விபத்துகள் என ’சிமென்ட் சிட்டி’ எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் அதிகம்.

நீராதார நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் அவைகளின் பரப்பு சுருங்கி வருகின்றன. மாவட்டத்தின் டெல்டா பகுதியில் ஒன்றான திருமானூர் ஒன்றியத்தின் விவசாய நிலங்கள் புள்ளம்பாடி வாய்க்கால் திறப்பையும், கொள்ளிடம் தடுப்பணைகள் திட்ட அறிவிப்பையும் நம்பி இருக்கிறது. நவீன அரிசி ஆலைகள், நெல்கொள்முதல் நிலைய விரிவாக்கம் ஆகியவையும் விவசாயிகளின் கோரிக்கையாக நீடிக்கிறது. ஒருபுறமும் கனிம சுரங்கங்களும் மறுபுறமும் கொள்ளிடத்தில் இயங்கும் மணல் குவாரிகளும் பகுதியின் நிலத்தடி நீரை வறள செய்கின்றன. சுகாதாரம் மற்றும் கல்வியில் அரசின் பங்கை அரியலூர் அதிகம் எதிர்பார்த்திருக்கிறது இத்தொகுதி. இங்கு சாலை விபத்துகளில் இறப்பவர்களை விட காயம்பட்டு அவசர சிகிச்சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறப்பவர்களே அதிகம்.

தமாகாவை உள்ளடக்கி 5 முறை காங்கிரஸ் கட்சிகளும், 5 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும் அரியலூர் சட்டமன்ற தொகுதியை வசமாக்கியுள்ளன. தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அதிமுகவின் துரை மணிவேல். பெயர் சொல்லும்படியாக இவரது செயல்பாடுகள் அமையவில்லை.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

எஸ்.ராஜேந்திரன்

அதிமுக

2

எஸ்.எஸ்.சிவசங்கர்

திமுக

3

ராம.ஜெயவேல்

தேமுதிக

4

க.திருமாவளவன்

பாமக

5

சி.பாஸ்கர்

ஐஜேகே

6

த.மாணிக்கம்

நாம் தமிழர்



29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:



ஆண்

1,23,530

பெண்

1,24,685

மூன்றாம் பாலினத்தவர்

4

மொத்த வாக்காளர்கள்

2,48,219



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

அரியலூர் தாலுகா- உடையார்பாளையம் தாலுகா (பகுதி) டி.சோழங்குறிச்சி (வடக்கு), தத்தனூர் (கிழக்கு), தத்தனூர் (மேற்கு), மணகெதி, வெண்மான்கொண்டான் (மேற்கு), வெண்மான்கொண்டான் (கிழக்கு), பருக்கல் (மேற்கு), பருக்கல் (கிழக்கு), நடுவலூர் (கிழக்கு), நடுவலூர் (மேற்கு), சுத்தமல்லி, உலியக்குடி, அம்பாபூர், உடையவர்தீயனூர், கீழ்நத்தம், கடம்பூர், சாத்தம்பாடி கோவிந்தப்புத்தூர், ஸ்ரீபுரந்தான் (வடக்கு) மற்றும் ஸ்ரீபுரந்தான் (தெற்கு) கிராமங்கள்.

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1952

பழனியாண்டி

இந்திய தேசிய காங்கிரசு

1957

இராமலிங்கபடையாச்சி

இந்திய தேசிய காங்கிரசு

1962

ஆர்.நாராயணன்

திராவிட முன்னேற்றக் கழகம்

1967

ஆர்.கருப்பையன்

இந்திய தேசிய காங்கிரசு

1971

ஜி.சிவப்பெருமாள்

திராவிட முன்னேற்றக் கழகம்

1977

டி.ஆறுமுகம்

திராவிட முன்னேற்றக் கழகம்

1980

டி.ஆறுமுகம்

திராவிட முன்னேற்றக் கழகம்

1984

எஸ்.புருசோத்தமன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1989

டி.ஆறுமுகம்

திராவிட முன்னேற்றக் கழகம்

1991

எஸ்.மணிமேகலை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

1996

டி.அமரமூர்த்தி

தமிழ் மாநில காங்கிரசு

2001

ப.இளவழகன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006

டி.அமரமூர்த்தி

இந்திய தேசிய காங்கிரசு

2011

துரை.மணிவேல்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

D. அமரமுர்த்தி

ஐ.என்.சி

60089

2

M. ரவிச்சந்திரன்

அ.தி.மு.க

55895

3

ஜெயவேல். ராமா

தே.மு.தி.க

8630

4

K. மாரியப்பன்

சுயேட்சை

2936

5

K. சேகர்

பி.ஜேபி

1111

6

M. சாமிதுரை

பிஸ்பி

1041

7

G. சுகுமார்

சுயேட்சை

782

8

S.M. சந்திரசேகர்

சுயேட்சை

768

9

V. செந்தில் (எ) செந்தில் குமார்

சுயேட்சை

629

10

N. மகேஷ்குமார்

சுயேட்சை

579

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

மணிவேல், துரை

அ.தி.மு.க

88726

2

D. அமரமூர்த்தி

ஐ.என்.சி.

70906

3

C. பாஸ்கார்

ஐ.ஜே.கே

9501

4

R. பன்னீர்செல்வம்

சுயேட்சை

7099

5

P. அபிராமி

பி.ஜே.பி

2981

6

T. முருகானந்தன்

சுயேட்சை

2640

7

K. நீலமேகம்

பி.ஸ்.பி

2267

8

M.K. முத்துசாமி

சுயேட்சை

1629

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

7 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

தேர்தல் 2016

8 years ago

மேலும்