உங்க தொகுதி எப்படி இருக்கு? - கும்மிடிபூண்டி

2011 சட்டமன்றத் தேர்தலில் கும்மிடிபூண்டி

வென்றவர்: சி. எச். சேகர் (தேமுதிக)

பெற்ற வாக்குகள்: 97708

வெற்றி வாய்ப்பை இழந்தவர்: கே. என். சேகர் (பாமக)

பெற்ற வாக்குகள்: 68452

தேமுதிகவின் சி.எச்.சேகர் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். அதிமுக கூட்டனியில் இருந்து வெளியேறிய பிறகு தொகுதியில் பெரிய அளவில் மேம்பாட்டு வேலைகள் நடைபெறவில்லை என்கிற கருத்தை மக்களிடம் கேட்க முடிகிறது. தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் .பி.வேணுகோபால் - எளிய மனிதர் என்ற நற்பெயரை பெற்றிருந்தாலும் , தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் போதுமான அளவு நடைபெறவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

காரனோடை – பெரியபாளையம் சாலை விரிவுபடுத்தப் பட்டது, தொகுதி முழுவதுமே சாலை வசதிகள் நன்றாக இருப்பதாக ஆகியவை மக்களிடையே நிறைவை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு அருகாமையில் அமைந்திருந்தாலும் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை என்கிற குறையும், கிராமங்களில் நூலகங்கள், முறையான விளையாட்டு திடல்கள், போதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லை என்பது மக்களின் குறைபாடாக உள்ளது ஆய்வு முடிவுகளில் வெளிப்படுகிறது.

குடிநீர் வசதி, மின் விநியோகம் ஆகியவை மக்களின் திருப்தியாக ஆய்வு முடிவுகளில் பதிவாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் அரசு மருத்துவமனைகளின் சேவைத் தரம் ஆகியவை சுமார் ரகங்களே என்கிறார்கள் மக்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE