என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

By செய்திப்பிரிவு

எம்.கே.எம். முத்துராமலிங்கம் - மக்கள் மன்றத் தலைவர்.

தேனி தொகுதியின் அடிப்படைப் பிரச்சினை ரயில் பாதை இல்லாதது. கடந்த 10 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பி. ரயில் பாதைத் திட்டங்களைக் கொண்டுவர முயற்சி செய்யவில்லை. வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் கேரளாவுக்கு இடம்பெயர்வது சகஜமாகிவிட்டது. கேரளாவில் வேலைநிறுத்தம், போராட்டம் என்றால் அதன் பாதிப்பு தேனியில் எதிரொலிக்கிறது. அதனால், தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெற புதிய தொழில் ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.



சிங்காரவேலன் - வழங்கறிஞர், தேனி.

அதிகமான மலைக் கிராமங்களைக் கொண்ட தேனி மாவட்டத்தில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும். மேகமலைக்குச் சரியான சாலை வசதி இல்லை. திண்டுக்கல் - சபரிமலை ரயில் திட்டத்தை நிறைவேற்றினால் தமிழக, கேரள வர்த்தகம் மேலும் மேம்பட்டு தேனி தொழில் வளர்ச்சி பெறும். வைகை அணை மற்றும் பெரியாறு அணைகளைத் தூர்வாரினாலே இரு மாநிலத் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்