என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

By செய்திப்பிரிவு

ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ - தலைவர், நேசக்கரங்கள் அறக்கட்டளை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் ஏழைகள். இவர்கள் குழந்தைகளுக்குத் தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி எட்டாக் கனியாக உள்ளது. எனவே, ராமநாதபுரத்தில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும் மற்ற சட்டமன்றத் தொகுதிகளில் பொறியியல் கல்லூரிகளையும் தொடங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாய்கள் நிரம்பிப் பல காலமாகிவிட்டன. நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. கண்மாய்களைத் தூர்வாரினால், அவை நிரம்பி விவசாயம் வளம் பெறும். வைகை ஆற்றுத் தண்ணீரைக் கால்வாய் மூலம் திருப்பியும் கண்மாய்களை நிரப்பலாம்.

தாகிர் சைபுதீன் - சமூக ஆர்வலர், ராமேஸ்வரம்.

தனுஷ்கோடியில் 200 பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் மட்டுமே குடிசைகளில் வசிக்கின்றன. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ் கோடிக்கு மூன்றாம்சத்திரம் வரை மட்டுமே சாலை உள்ளது. அங்கிருந்து தனுஷ்கோடிக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். இங்கு எட்டாம் வகுப்பு வரை படிக்க ஒரு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தத் தீவில் தகவல் தொடர்பு வசதி, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை. இங்கிருந்து இலங்கைக்குக் கப்பல் விடும் வாய்ப்புகளும் உள்ளன. இதனால், தனுஷ்கோடிக்கு சாலை, ரயில் போக்குவரத்துச் சாத்தியமாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE