என்ன சொல்கிறார்கள் இவர்கள்?

வே.ஈஸ்வரன் - ம.தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளர்.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் ஒரு பகுதிதான் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பொள்ளாச்சி, உடுமலைப் பேட்டை, மடத்துக்குளம், பொங்கலூர் பகுதிகளில் சுமார் 2.50 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் 30 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இடைமலையாறு திட்டத்தைக் கேரள அரசு நிறைவேற்றிய பின்பு, இந்தத் திட்டத்தைத் தமிழகம் நிறைவேற்றிக்கொள்ளலாம் என்று இதற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நமது மாநில அரசும், மத்திய அரசும் அக்கறை காட்டாததால் திட்டம் கிடப்பில் உள்ளது.



கவிஞர் கவிதாசன் - பொள்ளாச்சி.

பொள்ளாச்சி - பழனி அகல ரயில் பாதை திட்டம் இழுபறியில் உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, உடுமலை, பொள்ளாச்சி, பாலக்காடு, கோவை என்பது ஒரு வட்ட வடிவப் பாதை. இந்தப் பாதையில் உள்ள நகரங்கள் அனைத்துமே ஜவுளி, நூல், இரும்பு, சிறு தொழிற்சாலைகளைக் கொண்டது. இதனால், மக்கள் இடம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த நகரங்களை இணைக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு நான்கு பாசஞ்சர் ரயில்கள் தேவை. வரும் நாடாளுமன்ற உறுப்பினராவது இந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE