அதிமுகவினர் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்காததன் மூலம், தேர்தல் ஆணையம் தன் கடமையிலிருந்து தவறிவிட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தன் மனைவி வரலட்சுமியுடன் ஈரோடு கச்சேரி வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தத் தேர்தலில் மக்கள் பெருவாரியான சதவீதத்தில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். அதிமுகவினர் வாக்குக்கு 200 ரூபாய் கொடுத்திருந்தாலும்கூட மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கண்டிப்பாக யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் மோடி, லேடி, டாடி மூவருக்கும் மக்கள் டாட்டா காட்டி விடுவார்கள் என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago