ஜெ. பிரதமராக வாய்ப்பு: திண்டிவனம் ராமமூர்த்தி

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு உள்ளது என்றார் தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திண்டிவனம் கே.ராமமூர்த்தி.

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

“மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 35 இடங்கள் வரை கிடைக்கும். தேர்தல் ஆணையம் தேர்தல் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தேர்தல்களைப்போல இப்போது இல்லை. இளைஞர்கள், படித்தவர்கள் இந்தத் தேர்தலில் அதிகம் வாக்களிப்பர். அவர்களிடம் பிரச்சினைகளை வேண்டுமானால் சொல்லலாம், வேறு எதையும் சொல்லி திசைத் திருப்ப இயலாது.

பாஜக கூடுதல் இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தால்கூட, அந்த ஆட்சி அதிக நாள் நீடிக்காது. காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் கூட வலுவிழந்து காணப்படுகிறது. காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் இருந்தும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதற்கு முயற்சி செய்யவில்லை.

முதன்முதலாக மாநில முதல்வர்களிடையே ஒரு நல்லுறவு காணப் படுகிறது. இதனால், மாநிலக் கட்சிகள் சேர்ந்து முன்னிறுத்துபவரே ஆட்சி அமைக்க முடியும். அந்த வகையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது” என்றார் ராமமூர்த்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்