குடிநீர் தட்டுப்பாடு குறித்து கவலைப்படாதவர் ஜெயலலிதா: திருச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு கடைசி நாளான செவ்வாய்க்கிழமை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திருச்சி மக்களவைத் தொகுதியில் பல் வேறு இடங்களில் அக்கட்சியின் வேட் பாளர் மு.அன்பழகனை ஆதரித்து பிரச் சாரம் மேற்கொண்டார்.

திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங் கிய மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 15 இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: “தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் அல்ல நாங்கள். எந்த சூழ்நிலையிலும் உங்களோடு நாங்கள் இருப்போம். சிலர் தேர்தலுக்கு மட்டுமே வருவார் கள். தவறான வாக்குறுதிகளை வழங்குவார் கள். அதேபோன்ற செயலைத்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற் கொண்டு வருகிறார். ஹெலிகாப்டரில் பறந்து வரும் ஜெயலலிதாவுக்கு மக்க ளின் பிரச்சினைகள் என்னவென்று தெரியாது. அனைத்து இடங்களிலும் குடிநீர் கஷ்டம். இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தமிழக முதல்வர் ரூ.10-க்கு குடிநீரை விற்பனை செய்து வருகிறார்.

திமுக ஆட்சியில் மின்வெட்டு 2 மணி நேரம் மட்டுமே இருந்தது. மின்வெட்டே இருக்காது எனக் கூறி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தமிழகத்தில் மின்சாரமே இல்லாமல் செய்துவிட்டார். மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய, தமிழகத்துக்கு நன்மைகள் கிடைத்திட, இந்த தேர்தலில் வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார் ஸ்டாலின். இந்த பிரச்சாரத்தில் மாவட்டச் செயலர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்