மோடி பிரதமரானால் மோசமான அரசே உருவாகும்: சல்மான் ருஷ்டி கருத்து



நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவில் தற்போது ஆட்சி செய்யும் அரசை விட மிகவும் மோசமான அரசே உருவாக்கும் என்று பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கூறினார்.

நியூயார்க்கில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட பிரிட்டன் நாட்டு குடியுரிமை பெற்ற பிரபல இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 'இந்தியாவின் தலைவராக மோடி' என்ற தலைப்பின்கீழ் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், "நான் மோடியின் அரசு எப்படி இருக்கும் என்பது குறித்து மிகவும் கவலை அடைந்துள்ளேன். அவர் ஆட்சி அமைத்தால், அது தற்போது உள்ள அரசை விட மிகவும் கொடுமையான அரசாகத்தான் இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாகவே பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் விலைக்கொடுத்து வாங்கப்பட்டுள்ளதை கண்கூடாக காணமுடிகிறது.

ஏற்கேனவே அங்கு சுய தணிக்கை செய்யப்பட்ட நிலைதான் நிலவுகிறது. மக்களிடையே, தாங்கள் விலை போய் விடுவோமோ என்ற அச்சம் இருந்து வருகிறது. நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவரை இந்தியா இதுவரை கண்டதில்லை. அவரின் கீழ் அமையும் ஆட்சி நல்ல அனுபவத்தை தருமா? என்பதைதான் இனி நாம் பார்க்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE