தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) சென்னை திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும், கடந்த மாதம் 27-ம் தேதி சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்ற முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு சென்றடைந்தார்.
20 நாட்கள் கோடநாட்டில் தங்கியிருந்த முதல்வர் வரும் 16-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால், இன்று கோடநாட்டிலிருந்து சென்னை புறப்பட்டார்.
டிசம்பர் மாதம் கோடநாடு வந்து ஒரு மாத காலம் தங்கியிருந்த முதல்வர் மூன்று மாதங்களுக்கு பிறகு கடந்த மாதம் கோடநாடு சென்றார். தற்போது இருபது நாட்களுக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும், அ.தி.மு.க.வின் செயல்பாட்டை பொறுத்து கட்சியில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago