நாங்கள் ஜெயிக்கவும் இல்லை, தோற்கவும் இல்லை: மு.க.அழகிரி - திமுக தோல்வியை இனிப்பு வழங்கி ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

மக்களவைத் தேர்தலில் நாங்கள் ஜெயிக்கவும் இல்லை, தோற்கவும் இல்லை என்று திமுக தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலர் மு.க.அழகிரி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் திமுக 2-வது இடத்துக்குக்கூட வரக் கூடாது என்று தேர்தலுக்கு முன் மு.க.அழகிரி கூறியிருந்தார். மதிமுக பொதுச் செயலர் வைகோ, சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண் மற்றும் பல வேட் பாளர்கள் மு.க.அழகிரியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் கடைசி நேரத்தில் மு.க.அழகிரியின் ஆதர வாளர்கள் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. தேர்தல் முடிவு களை உடனுக்குடன் தெரிந்து கொள் வதற்காக மு.க.அழகிரியின் வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் எல்.இ.டி. டி.வி. வைக்கப்பட்டது. அதில் தேர்தல் முடிவுகளை மகன் துரை தயாநிதி மற்றும் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி பார்த்துக்கொண்டிருந்தார்.

ஒவ்வொரு தொகுதியிலும் திமுக பின்தங்கியிருப்பதாக வந்த தகவலை கேட்டு மு.க.அழகிரியும் துரை தயாநிதி யும் மகிழ்ச்சியடைந்தனர். வீட்டுக்கு வெளியே கூடியிருந்த ஆதரவாளர்கள், தி.மு.க.வின் தோல்வி செய்தி கேட்டு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

தேர்தல் முடிவுகள் குறித்து மு.க.அழகிரியிடம் கருத்து கேட்க செய்தி யாளர்கள் அவரது வீட்டுக்குச் சென் றனர். அவர்களிடம் அழகிரி கூறியது:

நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. நாங்கள் ஜெயிக்கவும் இல்லை, தோற்கவும் இல்லை. தேர்தல் முடிவுகளைப் பார்த்து ஆதரவாளர் களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். கேட்டால் பலனில்லை, நான் சொன்னது சொன்னதுதான் எனக் கூறிவிட்டு பேட்டியை அழகிரி முடித்துக் கொண்டார்.

வீட்டுக்கு வெளியே நின்றிருந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கூறும் போது, ‘திமுகவை 3-வது இடத்துக்குத் தள்ள வேண்டும் என அண்ணன் நினைத் தார். அது நடக்கல. ஆதரவு கேட்டு வைகோ உள்பட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் அண்ணனை நேரில் சந்தித்தனர். அவர்களும் ஜெயிக்க வில்லை. அதனால் அண்ணன் சற்று வருத்தமாக இருக்கிறார்’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE