வாக்கு எண்ணிக்கை நாளன்று அசம்பாதவிதங்கள் நிகழாத வகையில் தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி யின் தருமபுரி வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் நேற்று தருமபுரியில் பத்திரிக்கையாளர் களை சந்தித்தார். அப்போது அவர், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவினை தமிழகத்தில், குறிப்பாக தருமபுரியில் எந்தவித அசம்பாதவிதங்களும் இல்லாமல் நடத்தி முடித்ததற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
தருமபுரியில் மட்டும் அல்ல தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற உள்ளது. இது பொறுக்காமல் சிலர் குழப்பங்களை விளைவிக்க திட்டமிட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நாளன்று கலகம் உண்டாகும் என்று சிலர் மாவட்டத்தின் சில பகுதிகளில் வெளிப்படையாக பேசி வருவதாக வும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கிடையில் வாக்குப்பதிவு நாளன்று வன்முறை நடக்கலாம் என்று திருமாவளவன் கருத்து கூறியுள்ளார். மரக்காணம் கலவரத் திற்கு முன்பும் இதேபோன்று அவர் அறிக்கைவிட்டார். கலவரம் நடந்தது. தற்போது அவர் அறிக்கை விட்டிருப்பதால் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம். மேலும், வாக்கு எண்ணிக்கையில் அதிகாரிகளின் உதவியுடன் குளறு படி செய்ய ஆளும் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எனவே வாக்குப் பதிவினை சிறப்பாக நடத்தி முடித்தது போலவே வாக்கு எண்ணிக்கையையும் நேர்மையாக நடத்த நடவ டிக்கை எடுக்கவேண்டும். அதேபோல வாக்கு எண்ணிக்கை நாளன்று தொகுதி யில் எந்தவித பிரச்சினையும் எழாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கல்விக் கட்டணத்தை பெற்றோர் நேரடியாக வங்கிகளில் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
அனைtவருக்கும் கல்வித் திட்டம் மூலம் கடந்த ஆண்டில் பயன்பெற்ற மாணவர்கள் குறித்த தகவலை அரசு வெள்ளை அறிக்கையாக தரவேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது, பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, தமிழரசு, முன்னாள் ஊராட்சிக் குழு தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று கலகம் உண்டாகும் என்று சிலர் மாவட்டத்தின் சில பகுதிகளில் வெளிப்படையாக பேசி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago