விழுப்புரம் தனி தொகுதியை தக்க வைத்துக்கொள்ள அதிமுக வேட்பாளர் எஸ்.ராஜேந்திரன் இந்த முறை கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
காரணம், அதிமுகவுக்கு, பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக கடும் சவாலாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் சலசலக்கப்படுவதே.
கடந்த 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குவங்கியின் போக்கில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இத்தொகுதியில், வன்னியர் சமுதாயத்தின் ஆதரவு பெறும் கட்சிகளே வெற்றி வாய்ப்பை பெறுகின்றன. ஆனால் விழுப்புரம் தனி தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர் அதிமுக இத்தொகுதியில் காலூன்றியது.
இருப்பினும் அதிமுக வேட்பாளருக்கும் அவரை எதிர்த்து ஐ.மு.கூட்டணி தலைமையில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் வேட்பாளருக்கும் இடையே வெறும் 3000 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது.
இந்நிலையில், இம்முறை மாநில அரசின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் பலமாக கருதி அதிமுக களத்தில் இறங்கியிருந்தாலும் தேமுதிக வேட்பாளர் கே.உமாஷங்கர் வன்னியர் வாக்குகளையும், வன்னியர் சமுதாய ஆதரவையும் குறி வைத்தே களத்தில் இறங்கியுள்ளார். மொத்தத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பாமகவின் ஆதரவை நம்பியிருக்கிறார் தேமுதிக வேட்பாளர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தேமுதிக மாநில மாநாட்டிற்கு கிடைத்த ஆதரவை கருத்தில் கொண்டு விழுப்புரம் தொகுதியில் தேமுதிக வெற்றி வெறும் என அக்கட்சித் தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago