தமிழகத்தில் பாஜக கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும் என வேலூர் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து எல்.கே.அத்வானி பேசினார்.
வேலூரில் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி திங்கள்கிழமை மாலை பிரச்சாரம் செய்தார். வேலூர்-பெங்களூர் சாலையில் மாங்காய்மண்டி அருகே நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அழகான தமிழில் உங்களிடம் பேசமுடியவில்லை என்பதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் நடிகர் சிவாஜி கணேசனைத்தான் முதன்முதலில் சந்தித்தேன். அவர் நடித்த தமிழ் படத்தையும் பார்த்திருக்கிறேன்.
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் இடையே இதுநாள் வரை போட்டி இருந்தது. தற்போது, இந்த இரு கட்சியின் மாயை உடைந்து விட்டது.
இந்தியா 1947-ல் சுதந்திரம் அடைந்தது. ஜனநாயக இந்தியா வின் முதல் மக்களவை தேர்தல் 1952-ல் நடந்தது. தற்போது 16-வது மக்களவை தேர்தல் நடை பெறுகிறது. 1952-ம் ஆண்டு முதல் இப்போது வரை அனைத்து மக்களவையிலும் நான் இடம் பெற்றிருக் கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது.
அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்ற நான், வாஜ்பாய் அரசில் 6 ஆண்டுகள் துணை பிரதமராக இருந்திருக் கிறேன். இந்த தேர்தலில் எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும். நல்ல அரசு விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போதுவரை திமுகவும் அதிமுகவும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறார்கள். இந்த முறை முற்றிலும் நிலைமை மாறியுள்ளது. பாஜக தலைமையிலான வானவில் கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் மனதில் மாற்றம் வந்துள் ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி தான் முதன்மையான கூட்டணி.
மே மாதம் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள். ஜூன் மாதம் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அதேபோல, தமிழகத திலும் பாஜக கூட்டணி மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அத்வானி பேசினார்.
அத்வானிக்கு கருப்புக் கொடி
வேலூரில் அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய தேசிய லீக் கட்சியினர் ‘கருப்புக் கொடி காட்டுவோம்’ என எச்சரிக்கை செய்திருந்தனர். இந்த தகவலையடுத்து, வேலூர் மக்கான் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் முக்தர், வேலூர் மாவட்ட செயலாளரும் வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருமான ஷெரீப் பாஷா உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago