மின்வெட்டுக்கு ஜெயலலிதாவின் பதில் என்ன?: குஷ்பு கேள்வி

By செய்திப்பிரிவு

திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் மின் வெட்டு இருந்தபோது, நாடே முடங்கிவிட்டது என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தற்போது நிலவிவரும் 11 மணி நேர மின் வெட்டுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உமாராணியை ஆதரித்து, சேலம் மாநகரின் பல்வேறு பகுதியில் நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். சேலம் சிவதாபுரத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது: தமிழகத்தில் மின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆளுங்கட்சி இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் அளிக்கிறது. ஆனால், மின்சாரம் அளிக்க மறுக்கிறது.

திமுக ஆட்சியில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருந்தபோது, நாடே முடங்கிவிட்டது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால், தற்போது, 11 மணி நேரம் மின் வெட்டு தமிழகத்தில் நீடிக்கிறது. இதற்கு அவர் என்ன பதில் கூறப்போகிறார். மின் உற்பத்தியில் சதி செய்துவிட்டனர் என்று தமிழக முதல்வர் கூறுகிறார். மின்சாரத் துறையில் 10 ஆயிரம் பொறியாளர்கள், 70 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அத்தனை பேருமா சதி செய்துவிட்டனர்.

விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. பால் விலையும், பஸ் கட்டணமும், இல்லாத மின்சாரத்துக்கு மின் கட்டணமும் உயர்த்தியுள்ளனர். மின்சாரம் இல்லாததால், விவசாயிகள் பெரிதும் பாதி்ப்படைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்