ஜெயலலிதா பிரதமரானால் தமிழகத்துக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவார்: டாக்டர் என்.சேதுராமன் பேச்சு

By செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் தமிழகத்துக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தருவார் என்று மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் தலைவர் டாக்டர் என்.சேதுராமன் தெரிவித்தார்.

தென்காசி மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் அதிமுக வேட்பா ளர் வசந்தி முருகேசனை ஆதரித்து விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கோட்டையூர், தம்பி பட்டி, மகாராஜபுரம், வத்திரா யிருப்பு, கிருஷ்ணன்கோவில், ராமகிருஷ்ணாபுரம், மேட்டுத்தெரு, கிருஷ்ணன்கோவில் தெரு பகுதிகளில் டாக்டர் சேதுராமன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து சமுதாய மக்களின் பாது காவலராக உள்ளார். குறிப்பாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அதிமுக சார்பில் தங்கத்தில் கவசம் செய்து கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அவர் நாட்டின் பிரதமரானால் தமிழகத்தின் அனைத்து உரிமை களையும் பெற்றுத் தருவார்.

மின்சாரப் பிரச்சினை தீரும். நாட்டை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் பெற்ற அவருக்காக 40 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வது நமது கடமையாகும் என்றார் அவர்.

பிரச்சாரத்தின்போது, மூவேந்தர் முன்னணிக் கழக பொதுச் செயலர் இசக்கிமுத்து உடன் வந்திருந்தார். பிரச்சாரத்துக்கான ஏற்பாடுகளை கட்சியின் நகரச் செயலர் வி.டி.முத்து ராஜ், தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் மாவட்டச் செயலருமான ஆர்.விநாயகமூர்த்தி, மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் ஏ.மங்களசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

ஜெயலலிதா ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அவர் நாட்டின் பிரதமரானால் தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தருவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்