பெரம்பலூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.ராஜசேகரனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வியாழக்கிழமை பல்வேறு ஊர்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பெரம்பலூரில் ஜி.கே.வாசன் பேசியது:
“தீர்க்க தரிசனத்தோடு தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் பள்ளிகளை கொண்டு வந்தது காங்கிரஸ். மாறாக திராவிடக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அங்கெல்லாம் மதுபானக்கடைகளை கொண்டு வந்து ஏழைத் தாய்மார்களின் வயிற்றில் அடிக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த நிலைமையை உங்களால் மாற்ற முடியும்.
காங்கிரஸ் பேரியக்கத்தை எதிர்த்து 4 அணிகள் நிற்கின்றன. இதில் பாஜக மதவாதத்துக்கு பெயர் போன கட்சி. அதிமுக, மத்திய அரசு திட்டங்களை மக்களுக்கு சேராது தடுத்த கட்சி. இந்த தேர்தலில் மக்கள் அவர்களை மன்னிக்காது பாடம் புகட்டியாக வேண்டும். 9 ஆண்டு காலம் மத்திய அரசில் பதவி, ஆதாயம் அனுபவித்து விட்டு, தேர்தல் வந்ததும் மதச்சார்பினமை குறித்து நமக்கே வகுப்பு எடுக்கிறது திமுக.
கம்யூனிஸ்ட் கட்சிகளோ காங்கிரஸ் ஆதரவு நிலையிலிருந்து விலகியதிலிருந்தே தடுமாற்றத்தில் தவிக்கிறார்கள். அதிமுக, திமுக கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கான தேர்தல் அல்ல இது.
மத்தியில் நிலையான ஆட்சி வேண்டுவோருக்கு, மதச்சார்பற்ற ஆட்சி வேண்டுவோருக்கு, நிம்மதியான ஆட்சி வேண்டுவோருக்கான தேர்தல் இது. மத்திய அரசின் திட்டங்களை பெற்றுத் தர முடிந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்க வேண்டிய தேர்தல் இது” என்றார்.
பெரம்பலூரில் பிரச்சாரம் செய்கிறார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago