16-வது நாடாளுமன்றத்தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றுவரும் சூழலில், கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் திருப்பூர் அரண்மனைப்புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில் காலை 7.35மணிக்கு வாக்களித்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியது: "தமிழகத்தில் இது வரை இல்லாத அளவிற்கு, நாடாளுமன்றத் தேர்தலில் பணம் இறக்கப்படுகிறது. ஆளுங்கட்சியின் அமைதியான அராஜக போக்கிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். மக்கள் சக்தி முன் பணபலம் எடுபடாது என்பதை மக்கள் நிருப்பித்திருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். புது யுகப்புரட்சியை மோடி ஏற்படுத்த இருக்கிறார். மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு ஏற்றம் கிடைக்கும். கோடிகளை அள்ளி இறைத்தாலும் மக்கள் சக்தி முன் அவை எடுபடாது" என்றார்.
திருப்பூர் தொகுதி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் அங்கேரிபாளையம் சாலை கொங்கு மெட்ரிக் பள்ளியில் இன்று காலை 7மணிக்கு வாக்களித்தார். ஈரோடு காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் கோபி திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள செல்லப்பபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று காலை 7.30 மணிக்கு வாக்களித்தார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago