2016 தேர்தலில் நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: பி.எஸ்.ஞானதேசிகன் பேட்டி

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 2016 தேர்தலில் நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துவிடப்பட்டது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இல்லை என்ற வாதத்தை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும், தொண்டர் களும் மிகச்சிறந்த முறையில் களப் பணியாற்றினர். வேட்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி, தோல்வி என்பதைவிட, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலுவான சக்தியாக உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறோம். 2016 சட்டசபைத் தேர்தலில் நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, தமிழ் ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் விமர்சிப்பது துரதிருஷ்ட வசமானது. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரம் பற்றிய வழக்கை அரசியல் சாசன அமர்வு தீர்மானிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.

இப்படிப்பட்ட முக்கியமான வழக்குகளில் அரசியல் சாசன அமர்வு தீர்மானிக்கும் நடைமுறை வழக்கமானதுதான். குற்றவாளிகள் 7 பேரில் 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில் இதை எப்படி கையாள்வது என்பதை நீதித்துறை தீர்மானிக்க வேண்டும். இதை சிலர் அரசியலாக்கி, காரணம் கற்பிப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்