தமிழகத்தில் மக்களவைத் தேர் தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 24-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாம் அந்தந்தத் தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள் ளன. அங்கு மத்திய பாதுகாப்புப் படையினருடன் தமிழக போலீஸா ரும் இணைந்து 3 அடுக்கு பாது காப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களைத் தாண்டி 4-வது அடுக்காக, வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிப்புப் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய சென்னை தொகுதிக் கான வாக்கு இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென்சென்னை தொகுதி யின் இயந்திரங்கள் அண்ணா பல் கலைக்கழகத்திலும், வடசென்னை தொகுதிக்கான இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன.
ராணி மேரி கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்திலிருந்து 300-வது மீட்டரில் முகவர்கள் உள்ளனர். அவர்களுக்காக தற்காலிகமாக ஆஸ்பெஸ்டாஸ் குடில் போடப் பட்டுள்ளது.
அதில் 5 பேர் இருந் தனர். அவர்களில் மூவர் அதிமுக வேட்பாளரின் முகவர்கள். ஒருவர் திமுக, இன்னொருவர் சுயேச்சை வேட்பாளரின் முகவர்.
வாக்கு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள அறையில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் தங்கள் குடிலில் உள்ள எல்சிடி டி.வி.யில் வாக்குப் பெட்டி களை முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனின் முகவர் மட்டும் அங்கு இல்லை.
இதுகுறித்து சவுந்திரபாண்டிய னிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் தனி யாக எந்த முகவரையும் அங்கு போடவில்லை. நாங்களே ஒரு நாளைக்கு நான்கைந்து முறை சென்று கண்காணித்து வருகிறோம். அதற்கு மேல் தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் துள்ளது. அதன்மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.
மையத்தை பார்வையிட வந்த வடசென்னை திமுக வேட்பாளர் கிரிராஜன் கூறுகையில், ‘‘பாது காப்பு நல்ல முறையில் உள்ளது. இருந்தாலும் தினமும் இங்கு வந்து பார்வையிட்டுச் செல்கிறேன். எங்கள் முகவரும் இங்கேயேதான் இருக்கிறார்’’ என கூறினார்.
அதிமுக முகவர்களான கந்தசாமி, சகாயம், ராமச்சந்திரன் ஆகியோரிடம் கேட்டபோது, ‘‘காலை 8 முதல் மதியம் 2 மணி வரை ஒரு டீம், 2 முதல் 10 மணி வரை ஒரு டீம், பின்னர் 10 முதல் காலை 6 மணி வரை ஒரு டீம் என ஷிப்டு முறையில் இங்கு இருந்து வருகிறோம்’’ என்றனர். திமுக வேட்பாளரின் முகவர்கள் 2 ஷிப்டாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெவ்வேறு கட்சிகளின் முகவர்கள் என்றாலும், அங்கே தங்கியிருக்கும்போது நண்பர்கள்போல ஜாலியாக சிரித்துப் பேசிக் கொள்வதை பார்க்க முடிந்தது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago