பிஹாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவை எதிர்த்து போஜ்புரி நடிகர் குணால் சிங் போட்டியிடுகிறார். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆம் ஆத்மியிலும் முக்கிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது.
பாஜக சார்பில் தொடர்ந்து 2-வது முறையாக எம்பியாக இருக்கும் சத்ருகன் சின்ஹா மீண்டும் போட்டியிடுகிறார்.
பிஹார்வாசிகள் பேசும் மொழியான போஜ்புரிக்கு அம் மாநில மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, முன்னாள் மத்திய அமைச்சரான சத்ருகனுக்கு எதிராக போஜ்புரி நடிகர் குணால் சிங்கை வேட்பாளராக்கி உள்ளது காங்கிரஸ்.
கடந்த 2 முறையும் ஆளும் ஐக்கிய ஜனதா தள கூட்டணி சார்பில் சத்ருகன் போட்டியிட்டார். ஆனால், இந்தமுறை பாஜக தனித்து போட்டியிடுகிறது. ஐக்கிய ஜனதா தளம் சார்பில் டாக்டர். கோபால் பிரசாத் சின்ஹாவை போட்டியிடுகிறார். இதனால் இந்த இருவரும் சார்ந்துள்ள சின்ஹா சமூகத்தவர்கள் அதிகம் இருக்கும் பாட்னா சாஹிப்பில் கடும் போட்டி நிலவுகிறது.
ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக பர்வீன் அமானுல்லா போட்டியிடுகிறார். சமூக சேவகரான பர்வீன், மாநில அமைச்சராக இருந்தவர். காங்கிரஸின் முஸ்லிம் தலைவர் சையது சகாபுதீனின் மகளான இவர், ஆம் ஆத்மியில் சேர்வதற்காக கடந்த டிசம்பரில் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகினார்.
இங்கு நான்குமுனை போட்டி நிலவுவ தால், இந்தமுறை சத்ருகன் சின்ஹாவின் மனைவியும் பாலிவுட் முன்னாள் நடிகையு மான பூணம் சின்ஹாவும் கணவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இவர்களது மகளும் பாலிவுட் நடிகையுமான சோனாக்ஷி சின்ஹாவும் பிரச்சாரத்தில் குதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago