கோத்ரா சம்பவம் வேறு; இலங்கை இனப்படுகொலை என்பது வேறு: மதிமுக கொள்கைபரப்புச் செயலாளர் அழகுசுந்தரம் பேட்டி

By குள.சண்முகசுந்தரம்

மதிமுக-வின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் அழகுசுந்தரம் தேனி தொகுதி யில் போட்டியிடுகிறார். பிரச்சாரத்துக்கு நடுவே ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

தேர்தல் வெற்றிக்காக மதிமுக தனது கொள்கைகளில் சமரசம் செய்துகொண் டதுபோல் தெரிகிறதே?

தேர்தல் வெற்றிக்காக நாங்கள் யாருடனும் கொள்கை அளவில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். ஜனநாயக நாட்டில் அதிகார மையத்தை கைப்பற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளோடு களம் அமைத்து தேர்தலைச் சந்திப்பது இயல்பு.

1967-ல் அண்ணா கையாண்ட ’இன்க் ளூசிவ் பாலிடிக்ஸ்’ (Inclusive Politics) முறையைத்தான் இப்போது நாங்கள் பின்பற்றி இருக்கிறோம்.

காங்கிரஸை வீழ்த்துவதற்காக கம்யூ னிஸ்டுகள், ராஜாஜியின் சுதந்திரா கட்சி, காயிதே மில்லத்தின் முஸ்லிம் லீக் என எதிரும் புதிருமாய் இருந்த ஏழு கட்சிகளை ஒருங்கிணைத்து அண்ணா அன்றைக்கு ஒரு கூட்டணியை உருவாக்கி வெற்றி கண்டார். அவ்வழியே நாங்களும் வெற்றிக் கூட்டணியை அமைத்திருக்கின்றோம்.

ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம், ஆர்டிகிள் 370 நீக்கம் பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட் டுள்ள இந்த உறுதிமொழிகளை மதிமுக-வும் ஆதரிக்கிறதா?

கூட்டணியில் இருக்கிறோம் என்பதற் காக எல்லாவற்றையும் ஆதரிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

இந்த மூன்று விஷயங்களை பொறுத்தவரை, திராவிட இயக்கங்களின் ஜீவாதார கொள்கைகளான மதச்சார்பின்மை - சமயசார்பின்மை கொள்கைகளில் மதிமுக உறுதியுடன் நிற்கும்.

வைகோவுக்கு நேர் எதிரியாக நின்றவர் மு.க.அழகிரி. அவரிடம் வைகோ ஆதரவு கேட்டுப்போனது சரிதானா?

தேர்தலில் வெற்றிபெற பல்வேறு வியூகங்கள் எடுக்கப்படும், அழகிரியை எங்களது பொதுச் செயலாளர் சந்தித்த தும் ஒருவிதமான தேர்தல் வியூகம்தான்.

மனைவி இருப்பதை மறைத்த மோடி பிரதமராக வருவதற்கு தகுதியற்றவர் என திமுக தலைவர் கருணாநிதி சொல்லி இருக்கிறாரே?

கலைஞரும் கடந்த காலத்தில் கம்பம் முத்துத்தேவன்பட்டி சொத்து (ராஜாத்தி அம்மாள்) ஒன்றை மறைத்ததாக சட்ட மன்ற பதிவேடுகளில் குறிப்பு இருக் கிறதே!

பாஜக கூட்டணிக்கு 275 இடங்களில் வெற்றிவாய்ப்பு என்று வந்திருக்கும் கருத் துக் கணிப்புகள், தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு 3 இடங்கள்தான் கிடைக்கும் எனச் சொல்கிறதே?

தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கிறது. அதற்குள்ளாக ஏகப்பட்ட மாற்றங்கள் வரும். அப்போது பாஜக கூட் டணி இன்னும் அதிகமான இடங்களை பிடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு மரண தண் டனை கொடுக்க வேண்டும் என்கிறீர்கள். ஆனால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பலியாக காரணமான நரேந்திர மோடிக்கு மகுடம் சூட்டத் துடிக்கிறீர்களே?

குஜராத்தில் கோத்ரா சம்பவம் வேறு, இலங்கையில் நடந்த இனப்படுகொலை என்பது வேறு. குஜராத்தில் முஸ்லிம்களும் வாக்களித்துத்தான் மோடி மூன்று முறை குஜராத் முதல்வராக வந்திருக்கிறார்.

எனவே மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது.

அண்ணாவின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை மதிமுக எதிர்ப்பது சரிதானா?

சேதுகால்வாய் திட்டத்தை மதிமுக எதிர்க்கவில்லை. இப்போதுள்ள சூழலில் தமிழக கடற்கரையோரம் உள்ள லட்சக் கணக்கான மீனவர்களின் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் என்பதால் அந்தத் திட் டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றுதான் மதிமுக கூறுகிறது.

வைகோவை தோற்கடிக்க ராஜபக்‌சே இந்திய அரசு மூலமாக முயற்சிப்பதாக குற்றம் சுமத்தினீர்களே.. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதா?

ராஜபக்சே மாத்திரமல்ல, ஸ்டெர்லைட் ஆலை சம்பந்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பலரும் வைகோ நடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதில் கண் ணும் கருத்துமாய் இருக்கிறார்கள். ஆனால், அந்தத் தடைகளைக் கடந்து வைகோ வேகமாக முன்னேறிக் கொண்டி ருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE