மின் தட்டுப்பாட்டுக்கு நிர்வாக திறமையின்மைதான் காரணம்: ஸ்டாலின் பேட்டி

By செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

நாமக்கல்லில் திமுக வேட் பாளர் செ.காந்திசெல்வனை ஆதரித்து திங்கள்கிழமை திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரச் சாரம் மேற்கொண்டார். முன்ன தாக நாமக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் அம்பேத்கர் படத்துக்கு அவர் மலர் தூவி, மரியாதை செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசிய தாவது:

’’திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். 3-வது இடத்துக்கு திமுக தள்ளப்படுவதாக வெளியாகும் செய்திகளை நான் படிப்பதே இல்லை. அது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பது இல்லை.

நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை முழுமையாக செய்த பிறகு, தமிழகத்தை பற்றிப் பேசட்டும்.

தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டுக்கு சதித் திட்டம் தான் காரணம் என முதல்வர் ஜெயலலிதா கூறுவதில் எந்த வித நியாயமும் கிடையாது. காவல்துறையும் உளவுத் துறை யும் அவர் கட்டுப்பாட்டில் உள்ள போது, சதித் திட்டம் இருந் திருந்தால் அதைக் கண்டு பிடிக்க முடியாதா? இந்தப் பிரச்சினைகளுக்கு நிர்வாகத் திறமையின்மைதான் காரணம். பிரச்சினைகளைத் தீர்க்க முடியா விட்டால், அவர் முதல்வர் பத வியை ராஜினாமா செய்துவிட லாம்’’ இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்