தமிழகத்தில் மின்வெட்டை அதிகரித்ததுதான் திமுக, அதிமுக அரசுகளின் சாதனை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. திட்டமிட்டு செயல்பட்டால் 3 ஆண்டுகளில் மின்வெட்டை போக்கிவிட முடியும் என்ற நிலையில், முந்தைய 5 ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தை மின்வெட்டு மாநிலமாக மாற்றியது திமுகவின் சாதனை. அதையே காரணம் காட்டி ஆட்சிக்கு வந்தபின், மின்வெட்டை போக்குவதற்கு பதில் அதிகரித்ததுதான் அதிமுக அரசின் சாதனை.
காவிரிப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு விவகாரத்திலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக்கூட பயன்படுத்திக் கொள்ளாமல் தமிழகத்தின் உரிமைகளை தாரை வார்த்ததில் இரு கட்சிகளுமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. எனவே, இந்த இரு கட்சிகளையும் தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago