காஞ்சிபுரம் (தனி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், அவரவர்களுக்கான தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தங்கி, தேர்தல் பணிகளைப் பார்வையிட உள்ளனர். காஞ்சிபுரம் தொகுதி பொதுப் பார்வையாளராக இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஜெகதீஷ் சந்தர் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளார். இவரை காலை 9 முதல் 11 மணி வரையிலும், மாலையில் 3 முதல் 5.30 மணி வரையிலும் நேரில் சந்தித்து, தேர்தல் விதிமீறல் குறித்த புகார் களைத் தெரிவிக்கலாம். இவரது 8300076990 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொதுப் பார்வையாளராக அரு ணாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சுதிர்குமார் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி மையத்தில் தங்கியுள்ளார். காலை 9 முதல் 11 மணி வரையிலும், மாலையில் 3 முதல் 5.30 மணி வரையிலும் இவரை நேரில் சந்தித்து, தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களைத் தெரிவிக்கலாம்.
இவரது 8300076986 என்ற கைபேசி எண் ணிலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இந்தத் தகவலை காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.
16 வேட்புமனு நிராகரிப்பு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மொத்தம் 39 வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப் பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.சம்பத் குமார் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி வேட்பாளர் வசீகரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாம தம் ஏற்பட்டது. பின்னர் ஆம் ஆத்மி வேட்பாளரின் மனு ஏற்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க் கிழமை, 16 மனுக்கள் நிராகரிக்கப் பட்டதாகவும், 23 மனுக்கள் ஏற்கப் பட்டதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, தேர்தல் ஆணையத் தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களான எஸ்.ஜெகத்ரட்சகன் (திமுக), அருள் அன்பரசு (காங்கிரஸ்), கே.என்.ராமச்சந்திரன் (அதிமுக), முகமது அப்பாஸ் (பகுஜன் சமாஜ் கட்சி), பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்களான கே.பாரதி இந்திய கம்யூனிஸ்ட் (மார்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி), ஏ.சு.மணி (தேசிய ஸ்தாபன காங்கிரஸ்), இரா.மாசிலாமணி (மதிமுக), எஸ்.ஏ.என்.வசீகரன் (ஆம் ஆத்மி), ச.தர் (உழைப்பாளி மக்கள் கட்சி) மற்றும் அயோத்தி, கே.சண்முகம், கோ.சண் முகம், கே.சம்பத், அ.பழனி, ஆர்.பாரதிதாசன், ஆ.புகழேந்தி, கே.வி.மாதவராஜ், ஜெய பிரகாஷ், எம்.தர் உள்ளிட்ட சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago