மோடி பிரதமரானால் இந்தியாவின் அமைதி சீர்குலைந்துவிடும்- பாக். உள்துறை அமைச்சர் காட்டம்

தாவூத் இப்ராஹிம் குறித்து மோடி பேசிவரும் கருத்துக்கள் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது, மோடி பிரதமரானால் இந்தியாவின் அமைதி சீர்குலைந்துவிடும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,"உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்காமல், ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

மேலும், அமெரிக்க அரசு பின் லேடனிடம் பேச்சுவார்த்தையா நடத்தியதா? இந்த அரசு முதிர்ச்சி இல்லாமல் செயல்படுகிறது.நான் பிரதமரானால் பாகிஸ்தானிலிருந்து தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டு வருவேன்" என்று கூறினார்.

இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலி கான் கூறுகையில், மோடி முதலில் தாவூத் எங்கு இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அவரது பேச்சு கோபத்தை தூண்டும் வகையில் உள்ளது. மோடியின் பேச்சு கண்டிப்புக்குரியதாகவே இருக்கிறது. இந்தியாவின் முக்கிய கட்சியின் பிரதமர் வேட்பாளர் இனியும் ஒருமுறை பாகிஸ்தானை விரோதத்தின் உச்சமாக பாவித்து பேசவது கண்டிக்கதக்கது.

பாகிஸ்தானில் அமைதி நிலவ வேண்டும் என்ற முயற்சியில் நாங்கள் மேற்கொள்ளும் செயல்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பாகிஸ்தான் ஒரு போதும் இம்மாதிரியான கருத்துக்களை வரவேற்காது. பாகிஸ்தான் பலவீனமான நாடும் அல்ல, இத்தகைய அச்சுறுத்தல்கள் எங்களை பயப்படவும் வைக்காது” என்று தெரிவித்துள்ளார்.

1993-ம் ஆண்டு, மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய மூளையாக தாவூத் இப்ராஹிம் செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியான தாவூத், பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. தாவூத் இப்ராஹிமை ஒப்படைக்கும்படி இந்தியா பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தாவூத் பாகிஸ்தானில் இல்லை என்று அந்த அரசு கூறி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE