பணப்பட்டுவாடா குறித்து புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை:டிராபிக் ராமசாமி ஆதங்கம்

பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து போலீஸாருக்கு புகார் தெரிவித்தால் கூட சரியான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அரசியல் கட்சிகள் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கும் போக்கு தொடரு கிறது என்று சமூக சேவகர் டிராபிக் ராமசாமி கூறினார்.

சாலையில் பேனர்கள்

சாதாரண நாட்களிலேயே, பொதுப் பிரச்சினைகள் தொடர்பான புகார்களை கையிலெடுத்து நீதி மன்ற படியேறிவிடும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, தென் சென்னை தொகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட தமது கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஆனாலும் சென்னை போலீஸாருக்கும், சென்னை மாநகராட்சிக்கும், தேர்தல் துறையினருக்கும் புகார்களை தொடர்ந்து அளித்து வருகிறார்.

இதுபற்றி அவர் ‘தி இந்து’-வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொலை மிரட்டல்

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோர், கட்சி பேதமின்றி விதிகளை மீறி வருகிறார்கள். குறிப்பாக, சாலையில் பேனர்களை வைப்பது, அலங்கார வளைவுகளை அமைப் பது போன்ற பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல் களைத் தயங்காது செய்து வருகிறார்கள். அரசியல் கட்சியினர் செய்யும் விதிமீறல்கள் குறித்து தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறேன். சிலவற்றில் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆயினும் பல இடங்களில் தொடர்ந்து விதி முறைகள் மீறப்படுகின்றன.

பணப்பட்டுவாடா

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பணப்பட்டுவாடாவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கவுன்சிலருக்கு சொந்தமான கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு இடத்துக்கு பலத்த பாதுகாப்போடு கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் கிடைத்தது. அதுபற்றி சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றே தெரியவில்லை.

புதிய காவல்துறை ஆணையர்

தற்போது புதிய காவல் துறை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். பணப்பட்டு வாடா புகார்கள் மற்றும் தேர்தல் தொடர்பான இதர புகார்கள் மீது அவர் உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் பாதுகாப்புக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தென் சென்னை, கும்பகோணம் உள் ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடு கிறோம். எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவ்வாறு டிராபிக் ராமசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE