பாஜக தலை தூக்குவது கவலை அளிக்கிறது: க.அன்பழகன்

By செய்திப்பிரிவு

“அகில இந்திய அளவில் பா.ஜ.க. தலை தூக்குவது நமக்கு கவலையை அளிக்கிறது” என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் பேசினார்.

திருநெல்வேலி தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.தேவதாசசுந்தரத்தை ஆதரித்து, திருநெல்வேலி டவுனில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

திராவிட காலத்துக்கு, திராவிட இனத்துக்கு மரியாதை உண்டு. அது தற்போது அழிந்து விட்டது. அகில இந்திய அளவில் பா.ஜ.க. தலை தூக்குவது நமக்கு கவலையை அளிக்கிறது. காங்கிரஸும் நமக்கு நல்ல துணையாக தற்போது இல்லை.

மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். தி.மு.க. கூட்டணியில் மட்டுமே, கூட்டணி கட்சிகளுக்கு முறையாக சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் குடிநீரை கூட இலவசமாக கொடுக்க முடியாத நிலையில், 10 ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வாங்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். ஏழைகள் கண்ணீர் இந்த தேர்தலில் யாரையும் சும்மா விடாது, என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்