ஊழல்தான் காங். ஆட்சியின் உலக சாதனை: பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேச்சு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்தான் உலக சாதனை என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து பொன். ராதாகிருஷ்ணன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், தாயமங்கலத்தில் வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் அவர் பேசியது:

இந்தியாவில் சாதனையைப் படைத்த ஆட்சியை செய்தவர் வாஜ்பாய். குடிசையில் இருப்ப வரை மேலே கொண்டுவர சிந்தித் தவர். அவரது ஆட்சியில்தான் தங்க நாற்கர சாலைகள் மூலம் நாடு முழுவதும் தரமான சாலைப் போக்குவரத்து அமைக்கப்பட்டது. அந்த அமைச்சரவையில் இருந்த நான், ஆண்டுக்கு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தரமான பணிகள் செய்தோம். யாரிடமும் ஒரு பைசா வாங்கிய தாக யாரும் ஊழல் புகார் கூற முடியாது. கண்ணியமான, நேர்மை யான ஆட்சி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி ஊழல், நிலக்கரித் துறையில் ஊழல், ராணுவத்தினருக்கு கட்டப் பட்ட வீடுகளில் கொள்ளையடித்த வர்கள் என காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஏழை வீட்டுப் பெண்கள் தங்கத்தை நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது.

கடந்த 2009-ல் இலங்கையில் நடைபெற்ற போரில், இலங்கைக்கு துணை நின்ற காங்கிரஸ் அரசால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் அரசு. முல்லைப்பெரியாறு அணை, காவிரி பிரச்சினை, இலங்கைப் பிரச்சினை, மீனவப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தத் தேர்தல் காங்கிரஸ் கட்சியை தண்டிக்க வேண்டிய தேர்தல். இது காங்கிரஸின் தண்டனைக் காலம், தண்டித்தே ஆகவேண்டும். பாஜக கட்சியை வெற்றிபெறச் செய்வதன் மூலம் தான் காங்கிரஸைத் தண்டிக்க முடியும் என்றார்.

அதிமுக ஆதரவு தேவையில்லை:

தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். அதிமுக, திமுக என யாரிடமும் ஆதரவு கேட்க தேவை இருக்காது. பாஜகவை வெற்றி பெறச் செய்வதன் மூலம்தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்