சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலை சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 3 தொகுதிகளுக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்கள் அச்சடிக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலகம் மேற்கொண்டு வந்தது.
அதில் பிரதான பட்டியல், துணைப் பட்டியல்-1 அச்சடிக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. இந்நிலையில், துணை வாக்காளர் பட்டியல்-2 அச்சடிக்கும் பணியும் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இதையடுத்து பெரம்பூர், திரு.வி.க. நகர் உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களை ரிப்பன் மாளிகையில் இயங்கும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. மற்ற சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் அனுப்பும் பணி இன்று முடிவுக்கு வரும் என மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago