மக்களவைத் தேர்தலையொட்டி இன்று அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியருக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை ஆணையர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித் துவச் சட்டம் பிரிவு 135(பி)-ன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (ஐ.டி. நிறுவனங்கள் உள்பட) உணவு நிறுவனங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் (தினக்கூலி/ தற்காலிகம்/ ஒப்பந்தப் பணியாளர்கள் உள்பட) தேர்தல் நாளான ஏப்ரல் 24-ம் தேதி (இன்று), அவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்க வேண்டும் என அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இத்தகவல் ஏற்கெனவே ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சில அமைப்புகள் விடுமுறை அளிக்காமல் அனுமதி மட்டும் அளிப்பதாக, தொழிலாளர் துறைக்கு தகவல் வந்துள்ளது. எனவே, மேற்கூறிய அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுடைய தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago