கருத்துக் கணிப்பு வெளியிடுவது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: ஊடகங்களுக்கு பிரவீண்குமார் கடிதம்

By செய்திப்பிரிவு

தேர்தல் முடிவதற்கு முன்பு கருத்துக்கணிப்பு வெளியிடுவது விதிமுறை மீறிய செயல். எனவே, அனைத்து மாநிலங்களிலும் தேர் தல் முடிவடையும் வரை கருத்துக் கணிப்பு வெளியிட வேண்டாம் என ஊடக நிறுவனங்களுக்கு தலை மைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் உத்த ரவை மேற்கோள் காட்டி அனைத்து அச்சு, மின்னணு ஊடக நிறுவனங் களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கருத்துக் கணிப்பு என்று சொல்லி சில தொலைக்காட்சி சேனல்களில் ஏப்ரல் 14-ம் தேதி செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டதும், சில நாளிதழ் களில் செய்தி வெளியிடப்பட்டதும் தேர்தல் ஆணையத்தின் கவனத் துக்கு கொண்டுவரப்பட்டது.

தேர்தல் முடிவடைவதற்கு முன் பாகவே கருத்துக் கணிப்பு நடத்தி செய்தி ஒளிபரப்பிய தொலைக் காட்சி சேனல்களின் செயல்பாடும், கருத்துக் கணிப்பு செய்தியை வெளி யிட்ட நாளிதழ்களின் செயல்பாடும் தேர்தல் ஆணையத்தின் விதி முறைகளை மீறிய செயல் ஆகும்.

தேர்தல் முடிவடைவதற்கு முன்னர் கருத்துக் கணிப்பு வெளி யிடக்கூடாது என்பது ஆணையத் தின் விதிமுறை. கருத்துக் கணிப்பு வெளியிடுவதற்கான தடை என்பது தேர்தல் தொடங்கி அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடைந்து அரை மணி நேரம் வரையிலான காலத்தை குறிக்கும்.

எனவே, தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்கும்வண்ணம் வாக்குப்பதிவு முடிவடையும் வரை கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட வேண்டாம் என்று அச்சு மற்றும் மின்னணு ஊடகத்தி னர் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் பிரவீண்குமார் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்