மதுரையில் வாக்களித்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, 'எங்களுக்கே வெற்றி' என்று கூறி, உரிய விளக்கம் அளிக்காதது, செய்தியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
தென் மண்டல திமுக முன்னாள் செயலாளர் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் இன்று முத்துப்பட்டியில் வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஒரே வார்த்தை... வெற்றி எங்களுக்கே" என்றார். அதற்கு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைக் குறிப்பிடுகிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மீண்டும் "வெற்றி எங்களுக்கே!" என்று மட்டும் கூறிவிட்டு அவசரமாக புறப்பட்டார்.
இதனால் குழப்பம் அடைந்த நிலையில், அழகிரியின் ஆதரவாளர்களை விசாரித்தபோது, 'திமுக தோற்பதே எங்களுக்கான வெற்றி' என்பதை அவர் சொல்லிவிட்டுச் சென்றதாக விளக்கினர்.
முன்னதாக, திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட அழகிரி, இந்தத் தேர்தலில் திமுக.வுக்கு எதிராக ஓட்டு போடவேண்டும் என்று தனது ஆதரவாளர்களை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago