ஜெயலலிதா ஆட்சியில்தான் தமிழக பொருளாதாரம் சரிந்தது: திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் 3 ஆண்டு அதிமுக ஆட்சியில் வளர்ச்சி விகிதம் 4 சதவீ தமாக குறைந்துவிட்டது என்று திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல் வத்தை ஆதரித்து காஞ்சி புரம் நகராட்சி அலுவலகம் அருகில் வியாழக்கிழமை நடை பெற்ற பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில் 2009 - 10 நிதியாண்டில் தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதமாகவும், 2010-11-ம் நிதியாண்டில் 11.12 சதவீதமாக வும் இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, 2011-12 நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாகவும், 2012-13 நிதி யாண்டில் 4.14 சதவீதமாகவும் குறைந்துவிட்டது.

கடந்த திமுக ஆட்சியில் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் குறிப்பாக காஞ்சிபுரத்தில் திறக்கப் பட்டன. இதன் மூலம் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இதனால் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.

முஸ்லிம்களுக்கு இடமில்லாதது ஏன்?

கடந்த 3 ஆண்டு அதிமுக ஆட்சி யில் ஒரு பெரிய தொழிற்சாலை கூட தமிழகத்துக்கு வரவில்லை. சிறுபான்மையினரை மதிக்காதவர் ஜெயலலிதா. அதனால்தான் அவரது கூட்டணியில் முஸ்லிம்க ளுக்கு இடமில்லை. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் 3,300 கொலை களும் மற்றும் 1,532 கொள்ளை சம்பவங்க ளும், 900 வழிப்பறி சம்பவங்களும், 900 செயின் பறிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. திமுக-வை மோடி அலையால் ஒன்றும் செய்யவே முடியாது.

நிலுவையில் உள்ள வழக்குகள்

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, வருமானவரி ஏய்ப்பு வழக்கு ஆகியவை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இவர்கள் பல்வேறு வகைகளில் வழக்கை இழுத் தடித்து வருகின்றனர். நடைபெற்று வருவது ஜெயா ராஜ்ஜியமா, நீதி ராஜ்ஜியமா என்பதை வாக் காளர்கள்தான் தெரிவிக்க வேண் டும். இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணாவுக்கு மரியாதை

பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி யின் மனைவி ராஜாத்தியம்மாள், கட்சியின் துணைப் பொதுச் செயலர் துரைமுருகன், காஞ்சிபுரம் வேட்பாளர் ஜி.செல்வம், ஸ்ரீபெரும் புதூர் தொகுதி வேட்பாளர் ஜெகத் ரட்சகன், காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தா.மோ.அன்பரசன், நகரச் செயலர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அறிஞர் அண்ணா வின் இல்லத்துக்குச் சென்ற கருணாநிதி, அண்ணாவின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்