சிரிப்பது யார்? அழுவது யார்? தேர்தல் முடிவில் தெரியும்: தா. பாண்டியன்

“எங்களை விட்டு பிரிந்தவர்|களுக்கு தேர்தல் முடிவுகள் வரும் போது சிரிப்பது யார், அழுவது யார் என்பது தெரியவரும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா. பாண்டியன் பேசினார்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து பவானியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட்கள், தேமுதிக ஆகியவை இணைந்து தேர்தலை எதிர்கொண்டதால்தான் ஜெய லலிதா முதல்வர் ஆனார். இப்போது கூட்டணியில் இருந்து சிரித்துக்கொண்டே பிரியலாம் என்கின்றனர். கூட்டணியில் இருந்து விலகியதைப் பற்றி கவலையில்லை. இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்டுகள் தனித்து விடப்படவில்லை. மண்ணோடும், மக்களோடும் கலந்த இயக்கம் இது. எங்களை விட்டுப் பிரிந்தவர்களுக்கு சிரிப்பது யார், அழுவது யார் என்பது மே 16-ல் தேர்தல் முடிவு வரும்போது தெரியும்.

முதலில் நான்தான் பிரதமர் என்று ஜெயலலிதா சொன்னார். இப்போது, அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு அமையும் என்கிறார். மத்தியில் யார் ஆட்சி அமைத்தால் பங்கேற்பீர்கள் என்பதை ஜெயலலிதா தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE