நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,225 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,710 பேர் தங்கள் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 24-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் சுமார் 2,800 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அனைவரும் அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மார்ச் 31-ம் தேதிக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தர விட்டிருந்தார்.
அதன்படி 1,710 பேர் காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்களை கணக்கெடுத்து அவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,225 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 400 பேர் பிரபல ரவுடிகள். மேலும் தலைமறைவாக உள்ள 350 குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு சனிக் கிழமை கைது செய்யப்பட்டார். இவர் மீது 3 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.
ஒரு முறை குண்டர் சட்டத்திலும் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago