திமுக கூட்டணியில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது செவ்வாய்க் கிழமை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன..
ஜெயங்கொண்டம் அண்ணா சிலை முன் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் திருமாவளவன் பிரச்சாரம் செய் தார். நிறைவுப் பேச்சு என்பதால் பாஜக, பாமகவை சற்று கடுமை யாகவே விமர்சித்தார். மாலை மணி 6-ஐத் தொட்டதும், தான் தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற திருமாவளவன், சிறிது நேரத்தில் கட்சியினர் மோட்டார் சைக்கிள் களில் புடைசூழ, தானும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறிக் கொண்டு ஜெயங்கொண்டம் வடக் குத் தெரு, காந்தி நகர், காமராஜ புரம் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
பின்னர், காரில் ஏறிக்கொண்ட திருமாவளவனுடன், சிதம்பரம் செல்லும் வழியில் மீன்சுருட்டி அருகேயுள்ள பாப்பாக்குடி பகுதி யில் அவரது கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதையடுத்து, 144 தடையுத் தரவை மீறி ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி பகுதிகளில் பிரச்சா ரம் மேற்கொண்டது மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறியது ஆகியவற்றுக்காக திருமா வளவன் உள்ளிட்டோர் மீது இரு காவல் நிலையங்களிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago