பணம் பட்டுவாடாவைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு, நல்ல பலனைத் தந்துள் ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயல கத்தில் நிருபர்களிடம் புதன்கிழமை பிரவீண்குமார் கூறியதாவது:
தமிழகத்தில் வாக்குப்பதிவுக் கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும். முன்னதாக, 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். வாக் குப்பதிவு இயந்திரத்தில் 50 வாக்குகள் வரை பதிவு செய்து பரிசோதிக்கப்படும். மின்னணு இயந்திரங்கள், இரு வேட்பாளரின் ஏஜென்ட்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படும். 15 நிமிடம் வரை இரண்டாவது ஏஜென்ட் வராவிட்டால் ஒருவர் இருந்தாலே போதுமானது.
இயந்திரத்தில் குறை இருப்பது தெரிந்தால் உடனடியாக மாற்றப் படும். மாதிரி வாக்குப்பதிவு முடிந் ததும் அந்த வாக்குகளை அழித்து விட்டு, இயந்திரத்தில் பூஜ்ஜியம் என்ற பழைய நிலைக்கு மாற்றவேண்டும்.
4 அலுவலர்கள்
வாக்குச்சாவடியில் ஒரு வாக்குச் சாவடி அதிகாரி மற்றும் 3 வாக்குப் பதிவு அலுவலர்கள் என 4 பேர் இருப்பர். முதல் வாக்குப்பதிவு அலுவலர், விரலில் மை வைப்பார். அடுத்தவர் 17-ஏ படிவத்தில் கையெ ழுத்து பெறுவார். மூன்றாம் நபர், கன்ட்ரோல் யூனிட்டில் பொத் தானை அழுத்தி, வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார் செய்வார். மத்திய சென்னையில் வாக்கா ளர் ஒப்புகைச்சீட்டு பயன்படுத் தப்படுவதால், அங்கு மட்டும் அக்கருவியைக் கண்காணிக்க கூடுதல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.
வாக்குப்பதிவு தொடங்கி 3 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குகள் பற்றி குறிப்பெடுக் கப்படும். வாக்குப்பதிவு முடிந்த தும் அதனைக் குறிக்கும் வகையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கண்டிப்பாக ‘குளோஸ்’ பொத் தானை அழுத்தவேண்டும்.
மாலை 6 மணிக்கு வாக்குச்சாவ டியில் வரிசையில் நிற்போருக்கு டோக்கன் வழங்கப்படும். அவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். 6 மணிக்குப் பிறகு வருவோருக்கு டோக்கன் கிடையாது.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் நோக்கிலேயே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நல்ல பலனைத் தந்துள்ளது. பொது வாக இரவு 11 மணிக்குமேல் பணம் கொடுக்கப்படுவதாக தினமும் எனக்கு போனில் அழைப்பு கள் வரும். ஆனால், செவ்வாய்க் கிழமை இரவு எந்த அழைப்பும் வரவில்லை.
தர்மபுரியில் பணம் கொடுக்கச் சென்ற 4 அரசியல் கட்சியினர் பிடிபட்டனர். சென்னை போலீஸ் ஆணையர் திரிபாதிகூட, 144 தடை உத்தரவு குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு உதவிகரமாக இருப் பதாக தெரிவித்துள்ளார்.
குடிசைப் பகுதிகளில் வசிப்பவர் களை குறிவைத்து பணப் பட்டு வாடா அதிகம் நடப்பதாக வந்த புகாரையடுத்து, அப்பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. டிஜிபி ராமானுஜம், சட்டம்-ஒழுங்கு தொடர்பாக எந்த வாய்மொழி உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
2 ரூபாயில் சேலஞ்ச்
ஒரு வாக்காளர் போலியானவர் என்று வேட்பாளரின் ஏஜெண்ட் கருதினால், ரூ.2 செலுத்தி அதை சேலஞ்ச் (சவால்) செய்யலாம். அவரது சவால் தவறாகும் பட்சத்தில், அந்தப் பணம் அரசு கஜானாவுக்கு சென்றுவிடும். அதேபோல், உங்கள் வாக்கை வேறு யாராவது செலுத்திவிட்டால், அதையும் ரூ.2 செலுத்தி சேலஞ்ச் செய்யலாம். மேற்கண்ட இரண்டையும் செய்வதற்கு வாக்குச்சாவடியில் மனுக்கள் வைக்கப்பட்டிருக்கும்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago