நாடாளுமன்றத் தேர்தலுக்காக 22-ம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு எஸ்எம்எஸ் மற்றும் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 24-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 22-ம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி, வானொலி மூலமோ, எஸ்எஸ்எம் மூலமோ தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரச்சாரம் செய்வது போன்று தலைவர்கள் ஏற்கெனவே பேசிய பேச்சுக்களை திரும்பத் திரும்ப ஒளிபரப்பவும் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே 13 டி.வி. சானல்களின் ஒளிபரப்புகளை 24 மணிநேரமும் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
எஸ்எம்எஸ் பிரச்சார கட்டுப்பாடு தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறை களை மீறும் நிறுவனங் களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.எனவே, 22-ம் தேதி மாலை 6 மணிக்குப் பிறகு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்யக்கூடாது. இதை கண்காணிப்பது சிரமம்தான். எனினும் ஒரு கட்சியினர் விதிமுறை களை மீறி பிரச்சாரத்தில் ஈடுபடும் போது தேர்தல் ஆணையத்துக்கு கண்டிப்பாக புகார் தெரிவிப் பார்கள். இதேபோல், மாற்றுக் கட்சியினரிடமிருந்தும் புகார்கள் வரக்கூடும். அந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகள்
மாநிலத்தில் 9,226 வாக்குச் சாவடிகள் சிக்கல் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஆயிரம் வாக்குச் சாவடிகள் பிரச்சினைக்குரிய வாக்குச் சாவடி கள் ஆகும். வாக்காளர்கள் ஓட்டுப் போட பயப்படக்கூடிய சூழல் உள்ள வாக்குச்சாவடியைத்தான் பிரச்சினைக்குரியவை என்று குறிப்பிடுகிறோம்.
இத்தகைய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படும்.
வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி சில மாவட்டங்களில் 90 சதவீதம் அளவுக்கும் ஒருசில மாவட்டங்களில் 70 சதவீதமும் முடிந்துள்ளன.
பூத் சிலிப் கிடைக் காதவர்கள் மண்டல அலுவலகங் களிலும் தாலுகா அலுவலகங் களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு பிரவீண் குமார் கூறினார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago