தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு எதிராகப் பேசாததால் அதிமுவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தவ்ஹீத் ஜமாஅத் அறித்துள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் உயர்நிலைக்குழு சென்னையில் சனிக்கிழமையன்று கூடியது. இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தியபிறகு, அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் ஜெய்நுல் ஆபு தின் கூறுகையில், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்து ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது புகார் கூறி பேசி வருகிறார். ஆனால், பாஜக பற்றி இதுவரையில் எதுவும் பேசவில்லை. எனவே, எங்களின் ஆதரவை வாபஸ் பெறுகிறோம். அடுத்து என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து வரும் திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்போம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago