மு.க.அழகிரியைச் சந்திக்க நேரம் இல்லை: ஞானதேசிகன்

தென்மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வியாழக் கிழமை மதியம் மதுரை வந்தார். மாநகர் மாவட்டக் கட்சி அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் பி.சேதுராமன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.கே.ராஜேந்திரன் உள்பட கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி:

தேர்தலில் தோற்றால் அமைச் சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க. எச்சரித்துள்ளது. அதே பாணியில் உங்கள் கட்சி யிலும் நடவடிக்கை எடுப்பீர்களா?

அ.தி.மு.க.வில் அமைச்சர் களையும், மாவட்டச் செயலாளர் களையும் மாற்றுவது வழக்கமான நடவடிக்கைதான். எங்கள் கட்சி யில் அவ்வாறு நடவடிக்கை எடுக்க மாட்டோம்.

காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் பகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தந்த நிர்வாகிகளை அங்கீகரிப்பீர்களா?

தி.மு.க., அ.தி.மு.க. போன் றவை பணக்கார கட்சிகள். அத னால், மோதிரம் பரிசாக கொடுக் கிறார்கள். நாங்கள் ஏழைக் கட்சி. 45 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. சம்பாதிக்கவும் இல்லை. எனவே, நன்றாக வேலை பார்த்த காங்கிரஸ்காரர்கள், தங்கள் செலவிலேயே மோதிரம் வாங்கிப் போட்டுக் கொள்ளட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை.

மதுரைக்கு வரும்போது மு.க.அழகிரியைச் சந்திப்பேன் என்றீர்களே?

செய்தியாளர்கள் கேட்டதால் அப்படிச் சொன்னேன். ஆனால், எனக்கு நேரம் இல்லை. அதனால் சந்திக்க முடியாது. அடுத்த முறை வரும்போது சந்திப்பேனா என்பதை அப்போது சொல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE