புதுச்சேரியில் பாமகவுக்கு ஆதரவு: தேமுதிக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அனந்தராமனுக்கு தேமுதிக ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.

கடந்த வாரம் தேமுதிக வெளியிட்ட அறிவிப்பில், புதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படத்தையும், கட்சியின் பெயர் மற்றும் கொடியையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என கூறியிருந்தது.

புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, பாமக வேட்பாளரை அறிவித்துள்ளதால் இரண்டு கட்சிகளில் யாரை ஆதரித்தாலும் கூட்டணிக்குள் பிரச்சினை ஏற்படும் என கருதி இந்த முடிவை தேமுதிக எடுத்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக வேட்பாளர் அனந்தராமனுக்கு தேமுதிக ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், எனவே தொண்டர்கள் அனைவரும் பாமக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2014

1 year ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

தேர்தல் 2014

10 years ago

மேலும்