`தி.மு.க. வேட்பாளரை தோற்கடித்தால்தான் நமக்கு வாழ்வு’ என, மு.க.அழகிரி தெரிவித்தார். திருநெல்வேலி, தச்சநல்லூரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா 29-வது மணநாள் விழாவில் பங்கேற்று, அவர் பேசியதாவது: கழகம்தான் நமக்கு பெரிது. அதைவிட பெரிது கருணாநிதி. அவர் என்னை வீட்டைவிட்டு வெளியேற்றி இருக்கிறார். மீண்டும் சேர்த்துக்கொள்வார். அண்ணா அறிவாலயமும் எனது சொந்த வீடுதான். இதற்கெல்லாம் முடிவு தேர்தலுக்குப்பின் தெரியவரும். என் மீதான பழிச்சொல் கருணாநிதியின் உள்ளத்திலிருந்து வரவில்லை. உதட்டிலிருந்து வந்தது. என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு காரணம் யார் என்பது உங்களுக்கு தெரியும்.
திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க. தோற்பதற்காக தேவதாசசுந்தரத்தை நிறுத்தியிருக்கிறார்கள். ஸ்டாலினின் நண்பருக்கு அவர் சொந்தக்காரர், பணக்காரர் என்பதால் வேட்பாளராக்கி உள்ளனர். வேட்பாளரிடமிருந்து மாவட்டச் செயலர் ரூ. 5 கோடி பெற்றுக்கொண்டு, அதில் ரூ. 30 லட்சத்தை மட்டும் ஒன்றிய செயலர்களுக்கு கொடுத்துவிட்டு, மீதி பணத்தை சுருட்டிக்கொண்டார். பக்கத்து தொகுதி வேட்பாளருக்கும் தேவதாசசுந்தரம் ரூ.1 கோடி கொடுத்திருக்கிறார். எனக்கு பதவி ஆசை எதுவும் இல்லை. உங்களுக்காகவே இங்கு வந்து நிற்கிறேன். திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை 3-வது, 4-வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும். அதன்படி செயல்படுங்கள். அவ்வாறு செய்தால்தான் நமக்கு வாழ்வு, என்றார் அழகிரி.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2014
1 year ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago
தேர்தல் 2014
10 years ago