நம்பிக்கை துரோகம் செய்த அதிமுக: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேச்சு

வாக்களித்த மக்களுக்கு அதிமுக நம்பிக்கை துரோகம் செய்து விட்டது என்றார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

கரூர் மக்களவைத் தொகுதி துவரங்குறிச்சியில் ஞாயிற்றுக் கிழமை மாலை திமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், துவரங்குறிச்சி யைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேசியது:

“இந்த நாட்டை மதவாதம் என்ற மிகப்பெரிய அபாயம் சூழ்ந்து வரு கிறது. அதை எதிர்த்து குரல் கொடுக்கும் மிகப்பெரிய இயக்க மாக திமுக உள்ளது. மீண்டும் ராமர் கோயிலைக் கட்டுவோம் எனக் கூறுகின்றனர். இதனால் மீண்டும் மதநல்லிணக்கத்துக்கு எதிரான மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக திமுகவும், கருணாநிதியும் புறப்பட்டுள்ளனர்.

அனைத்து ஜாதி, மத மக்களும் இணைந்து வாழும் இந்த மண்ணில் பிரச்சினை ஏற்படுத்த முனைகின்றனர். இந்த மண்ணில் இதற்கு இடமில்லை என்பதைத்தான் கருணாநிதி வலியுறுத்தி வருகிறார்.

மின்தடையை 3 மாதத்தில் ஒழிப் போம், விலைவாசியைக் குறைப் போம் என பல்வேறு வாக்குறுதி களை அளித்து ஆட்சிக்கு வந்த அதிமுக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. மக்கள் இதனை எண்ணிப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

வாக்குறுதிகளை நிறைவேற் றாமல் இருந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை இந்த தேர்தல் மூலம் மக்கள் ஆட்சியாளர்களுக்கு உணர்த்த வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE